Search

மாயமான விமானத்தில் பயணித்தவர்களின் உடல்கள் கடலில் மீட்பு, இந்தோனேஷியா கடற்படை அதிகாரி தகவல்!

இந்தோனேஷியாவின் சுரபவா நகரில் இருந்து சிங்கப்பூர் நகருக்கு ஏர்ஏசியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான ‘ஏ320-200‘ ரக விமானம் கடந்த 28-ந்தேதி 162 பேருடன் காலை புறப்பட்டுச் சென்றது. இந்த விமானம் புறப்பட்டுச் சென்ற அடுத்த ஒரு மணி நேரத்தில் ஜாவா கடல் பகுதியில் பறந்தபோது விமான கட்டுப்பாட்டு மையத்துடன் கொண்டிருந்த தொடர்பை இழந்தது. தொடர்ந்து விமானம் பற்றிய தகவல் எதுவும் கிடைக்காததால் அந்த விமானம் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.

ஏர் ஏசியா விமானம் மாயமாய் மறைந்த தென் கிழக்கு ஜாவா கடல் பகுதியில் 10 ஆயிரம் சதுர நாட்டிகல் மைல் தூரத்தை 7 பகுதிகளாக பிரித்து தேடும் முயற்சியில், இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், தென்கொரியா நாடுகளைச் சேர்ந்த 30 கப்பல்கள், 15 விமானங்கள், 7 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டன. இன்று மாயமான ஏர்ஏசியா விமானத்தின் உடைந்த உதிரிபாகங்கள் ஜாவா கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. மாயமான மலேசிய விமானத்தின் நொறுங்கிய பாகங்கள் மற்றும் சடலங்களின் புகைப் படக்காட்சிகள் டி.வி.களில் வெளியானது.

 

ஏர்ஏசியா விமானத்தை தேடியபோது ஜாவா கடலில் இந்தோனேஷியா விமானப்படையினரால் மீட்கப்பட்ட பொருட்கள்.

இது தொடர்பாக மாயமான விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள ஹெர்குலிஸ் போர் விமானத்தின் லெப்டினன்ட் டிரை விபோவை கூறுகையில், காலை 5மணி நேர தேடுதல் முயற்சிக்குப் பின்னர், கடலில் விமான பாகங்கள் போன்றவை மிதப்பதை கண்டுபிடித்தோம். விமானத்தின் நொறுங்கிய பாகங்கள் போர்னியோவின் கரிமட்டா ஜலசந்தி பகுதியில் மிதப்பதையும் கண்டோம். என்றார். ஜாவா கடலின் பங்கலான் பன் பகுதியில் மிதப்பது ஏர்ஏசியா விமானத்தின் நொறுங்கிய பாகங்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்தோனேஷிய மீட்புக் குழு அதிகாரிகள் கூறும்போது ‘விமானம் காணாமல் போன கடல் பகுதியில் இருந்து 40 க்கும் மேற்பட்ட பயணிகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அப்பகுதியில் இன்னும் உடல்கள் மிதக்கின்றன. அவை நெருங்க முடியாத அளவிற்கு உள்ளன. இந்த உடல்களை மீட்பதற்கு இந்தோனேஷிய கடற்படை கப்பல் வரவழைக்கப்பட்டு உள்ளது. என்றனர். என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *