வல்வை வைத்தியசாலையில் கடமைபுரியும் மற்றும்கடமை புரிந்து இளைப்பாறிய ஊழியர்களையும் கெளரவிக்கும் நிகழ்வு வைத்திய அதிகாரி DR.P கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.
தமது அர்ப்பணிப்பான சேவையினை இரவு,பகல் பாராது வழங்கிவரும் ஊழியர்கள் அனைவரது சேவையினையும் பாரட்ட வேண்டும் என்ற நோக்கில் விஸ்னுசுந்தரம் ஞாபகார்த்த நிதியத்தின் அனுசரணையில் இந்நிகழ்வு வைத்தியச்சலை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக DR A. கேதிஸ்வரன் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் யாழ்ப்பாணம் பங்குபற்றியிருந்தார்.
சிறப்பு விருந்தினர்களாக உதவிப்பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் DR S. சிவராணி அவர்களும் சங்கானை வைத்தியசாலை வைத்திய அதிகாரி DR S பிரகாசன் அவர்களும் கதிர்வீச்சு ஆலோசகர் DR S.நிமலன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர் மற்றும் பிரதேசவாசிகள் நோயாளர் நலன்புரிச்சங்கத்தினர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
ஊழியர்கள் மற்றும் ஓய்வுநிலை ஊழியர்களுக்கான சிறப்பு பரிசில்களும் ஞாபகார்த்த சின்னங்களும் பிரதமவிருந்தினர் அவர்களாலும் சிறப்புவிருந்தினர் அவர்களாலும் வழங்கிவைக்கப்பட்டது.
சிறுவர்களின் கலைநிகழ்வுகளும் ஊழியர்களின் நாடக நிகழ்வுகளும் நடைபெற்றன.