வடக்கில் நிலவி வரும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என வெளிநாட் கண்காணிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
வடக்கு வாக்காளர்கள் வாக்களிப்பில் பங்கேற்பதனைத் தடுக்கும் வகையில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இன்றைய தினம் வடக்கிற்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் பார்வையிட உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
வடக்கில் திடீர் வீதிச் சோதனைச் சாவடிகள் அமைத்து வாக்காளர்கள் வாக்களிப்பதனை தடுக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக சில வேட்பாளர்கள் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
வாக்கு எண்ணுதல் தொடர்பிலும் கண்காணிப்பு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், நேபாளம், பூட்டான் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.