ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அலரி மாளிகையிலிருந்து வெளியேறியுள்ளார்.
சற்று நேரத்திற்கு முன்னதாக ஜனாதிபதி மஹிந்த இவ்வாறு அலரி மாளிகையிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரவிக்கப்படுகிறது.
புதிய ஜனாதிபதிக்கு தமதுகடமைகளை ஆற்றுவதற்கு சந்தர்ப்பம் அளிக்கும் வகையில் தாம் இந்த தீர்மானத்தை எடுத்ததாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி மஹிந்த சந்தித்துள்ளார்.
அலரி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளத.
புதிய ஜனாதிபதிக்கு தடையின்றி கடமைகளை மேற்கொள்ள இடமளித்து தாம் அலரி மாளிகையை விட்டு வெளியேறுவதாக ஜனாதிபதி மஹிந்த, எதிர்க்கட்சித்தலைவரிடம் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.