மைத்திரிபால சிறிசேன 51.28 வீதத்தினால் வெற்றி: தேர்தல் ஆணையாளர் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

மைத்திரிபால சிறிசேன 51.28 வீதத்தினால் வெற்றி: தேர்தல் ஆணையாளர் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 51.28 வீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இந்த தகவலை சற்று முன்னர் வெளியிட்டுள்ளார். தேர்தல் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்இதனைத் தெரிவித்துள்ளார். மைத்திரபால சிறிசேன மொத்தமாக அறுபத்து இரண்டு லட்சத்து பதினேழாயிரத்து நூற்று அறுபத்து இரண்டு(6217162) வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மொத்தமாக 47.58 வீத வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்தவிற்கு கிடைக்கப்பெற்ற மொத்த வாக்குகள் ஐம்பத்து ஏழு லட்சத்து அறுபத்து எட்டாயிரத்து தொன்னூறு (5798090) வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி, மைத்திரிபால சிறிசேன மேலதிகமாக நான்கு லட்சத்து பத்தொன்பதாயிரத்து எழுபத்து இரண்டு வாக்குகள் மேலதிகமாக பெற்று இந்த தேர்தலில் வெற்றியீட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.