வல்வை விளையாட்டுக் கழக வருடாந்த மாவட்ட ரீதியிலான மென்பந்தாட்ட சுற்றுப்போட்டி குறித்தபடி நேற்று மற்றும் இன்று நடைபெற்ற மென்பந்தாட்ட போட்டியில் 18 அணிகள் பங்குபற்றின இதில் 4 அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
அவ் அணிகளாக திருநெல்வேலி முத்துதம்பி விளையாட்டுக்கழகம் , இனுவில் கலை ஒளி விளையாட்டு கழகம் , கரவெட்டி ஞானம்ஸ் விளையாட்டு கழகம் , கரவெட்டி மகேசன் விளையாட்டு கழகம் ஆகிய கழகங்கள் தகுதி பெற்றுள்ளது
எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 3ம் 4ம் பிரிவிற்கான போட்டிகள் நடைபெறும். இதில் நான்கு அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்.