சிவபெருமானுக்கு ஒருநாள் சிவராத்திரி; திருமாலுக்கு ஒருநாள் வைகுண்ட ஏகாதசி. ஆனால் அம்பிகைக்கோ ஒன்பது நாள் நவராத்திரி! இதை சாரதா நவராத்திரி என்றும் அழைப்பர்.
(ஸ்ரீவித்யா உபாசகர்கள், பராசக்தியின் சேனைத் தலைவியான வாராஹி நவராத்திரியை ஆடி மாதத்திலும்; பராசக்தியின் மந்திரியான சியாமளா நவராத்திரியை மாசி மாதத்திலும்; லலிதா நவராத்திரியை பங்குனி மாத ராமநவமி சமயத்திலும் கொண்டாடுவர்.)
சாரதா நவராத்திரியின் முதன் மூன்று நாட்கள் துர்க்கையாகவும்; அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியாகவும்; கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் அம்பிகையை வழிபடுகிறோம்.
பத்தாம் நாள் விஜயதசமியாகக் கொண்டாடுகிறோம். அந்த நாளில் எந்த நல்ல செயல்களைத் தொடங்கினாலும் வெற்றிபெறும் என்பதால், குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் உட்பட பல செயல்களை விஜயதசமியில் தொடங்குகிறோம்.
வல்வெட்டிதுறை குச்சத்தில் அமைந்திருக்கின்ற சரஸ்வதி ஆலயத்தில் சிறப்பான முறையில் பூசைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.தொடர்ந்து ஒன்பது நாட்களும் சிறப்பான முறையில் நடைபெறவுள்ளன.