னடா ரொரன்ரோவில் 11 ஆம் திகதி நடைபெற்றுள்ள “ஈகுருவி பிஸ்தா எக்சலென்ற நைற் விருது” வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டுள்ள முன்னாள் வடமாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளரும்.பிரபல எழுத்தாளருமான வல்வை.ந.அனந்தராஜ் கலந்து “ஈழத் தமிழர்களின் பொருளாதார வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோரின் வகிபாகம்” சிறப்புரை ஆற்றினார். கனடா ரொரன்ரோ கொன்வன்சன்; மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில், ரொரன்ரோவின் தமிழ் வர்த்தக சமுகத்தைச் சேர்ந்த 500 தொழில் அதிபர்கள் கலந்து கொண்டுடுள்ளார்கள் இந்த நிகழ்வில் வல்வை ந.அனந்தராஜ் அவர்களும், சிறப்பு விருந்தினராக கலந்த தமிழகத்தின் பேராசிரியர் முனைவர் ஜயந்தஸ்ரீ பாலகிருஸ்ணன் அவர்களும் சிறப்புரையை ஆற்றியுள்ளார்கள் . வருடந்தம் நடைபெறும் இவ்விழாவில் மிகச் சிறந்த தொழில் அதிபர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.