பிரித்தானியா வாழ் வல்வை மக்கள், கனடா வாழ் வல்வை மக்கள் மற்றும் வல்வை மக்களுக்கு சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பினரின் அன்பான வேண்டுகோள் 14.01.2015

பிரித்தானியா வாழ் வல்வை மக்கள், கனடா வாழ் வல்வை மக்கள் மற்றும் வல்வை மக்களுக்கு சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பினரின் அன்பான வேண்டுகோள் 14.01.2015

13.01.2015

அன்பான பிரித்தானியா வாழ் வல்வை மக்கள், கனடா வாழ் வல்வை மக்கள் மற்றும் வல்வை மக்களுக்கு சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பினரின் அன்பான வேண்டுகோள்,

பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கம் சிதம்பரா நலன்பரிவோர் வலையமைப்பினரால் கடந்த நான்கு வருடங்களாக நடாத்தப்பட்டு வரும் கணிதப் போட்டியானது ஒவ்வோர் வருடமும் மிகச் சிறந்த முறையில் நடத்தப்பட்டு வருவதுடன் மிகப் பெரிய வளர்ச்சியை நோக்கியும் விரிவடைந்து வருகின்றது. இவ் கணிதப்போட்டியானது அனைத்து இன மாணவர்களும் பங்கு பெறும் முறையினிலேயே நடத்தப்படடு வருகின்றது இவ் கணிதப்போட்டியானது பிரித்தானியாவில் மட்டுமே கடந்த மூன்று வருடங்கள் நடத்தப்பட்டு வந்தது, கடந்த வருடம் பரீட்சாத்தமாக வல்வையில் நடத்தப்பட்டு மிக பெரிய வரவேற்பைப் பெற்றதை நாம் யாவரும் அறிந்த விடயமே

எம் இவ் கணிதப் போட்டியானது இவ் வருடம் கனடா, பிரித்தானியா, வடமராட்சி என விரிவுபடுத்தப்பட்டுள்ளது எனவே அன்பான வல்வை மக்களே இன்றைய உலகில் கல்வியின் வளர்ச்சி மிக அவசியம் என நாம் யாவரும் அறிவோம் எம்மால் உலகளாவிய ரீதியில் கல்வியை முன்னெடுக்க முடியும் என்பதை நாம் அனைவரும் இணைந்து இவ் கணிதப்போட்டியை முன் நோக்கி கொண்டு செல்வதன் மூலமே நிருபிக்க முடியும் இதைச் செய்ய வேண்டிய கடமைப்பாடு உங்களையே சாரும்

அன்பான பெற்றோர்களே உங்கள் பிள்ளைகள் ஒவ்வொருவரையும் இக் கணிதப் போட்டியில் பங்கு பற்றச் செய்வதுடன் அதுவே எமது நோக்கத்தினை முன் நோக்கி கொண்டு செல்ல உங்கள் பங்களிப்பாக அமையும் கல்வியிலும் நாம் வல்லவர்கள் என இக் கணிதப் போட்டியை வெற்றிப்பாதையில் கொண்டு செல்வதன் மூலமே அது சாத்தியமாகும்.

கனடா மற்றும் வடமராட்சிப் பகுதிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை  (DOWNLOAD) செய்து பூர்த்தி செய்து அந்தந்த இடங்களுக்கு பொறுப்பானவர்களிடம் தொடர்வு கொண்டு கொடுக்குமாறு தாழ்மையுடன் அறியத்தருகின்றோம்.

கனடாவிற்கான ONLINE APPLICATION    எமது இணையங்களுடாக மேற் கொள்ள முடியும் என்பதினை தெரியப்படத்தவதுடன் ,இக் கணிதப் போட்டிக்கான அறிவித்தல் அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கான அறிவித்தலாக அமையும் என்பதினையும் கூறிக் கொள்ள விரும்புகின்றோம்.

எனவே கீழ் காணும் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து இதை முன்னேடுத்துச் செல்வோமாக

பிரித்தானியாவிற்கான ONLINE APPLICATION

இங்கே அழுத்தவும்

கனடா ONLINE APPLICATION செய்வதற்கு

இங்கே அழுத்தவும்

வடமராட்சி பகுதிகளுக்கான விண்ணப்பம் பதிவிறக்கம் (DOWNLOAD) செய்வதற்கு

இங்கே அழுத்தவும்

சிதம்பரா நலன்பரிவோர் வலையமைப்பு (CWN)

Leave a Reply

Your email address will not be published.