வல்வெட்டித்துறை பகுதியில் மார்கழி மாதம் பிள்ளையார் பிடித்து விநாயகர் வழிபாட்டில் ஈடுபடுவதும் பிடிக்கபட்ட பிள்ளையார் திருவுருவங்களை சேர்த்து வைத்து அவற்றை பொம்மலாட்ட விழா எடுத்து கடலில் கரைப்பது வழமை.
இதற்காக நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய தொண்டர்களால் பொம்மலாட்ட நிகழ்வூ பல ஆண்டுகளாக தைப்பொங்கல் தினத்தன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது..
நிகழ்வானது ஆதிவைரவர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு ஊறணி தீர்த்த கடற்கரையை வந்தடையும். அந்த வகையில் இம்முறைக்கான விழா இன்று மாலை நடைபெற்றது. இதற்காக இராட்சத யானை உருவப்பொம்மை ஒன்று வடிவமைக்கப்பட்டிருந்தது.