ஜக்கிய இராச்சியம் (UK) SouthWest London , Tooting பகுதியில் இயங்கி வரும் தென்மேற்கு இலண்டன், தமிழ் கல்விக்கூடத்தின் 10 வது ஆண்டு நிறைவு விழா வெகு விமர்சையாக The Archbishop Lanfranc Academy, Mitcham Road, Croydon, Surrey CR9 3AS இல் கடந்த 18-01-2015 ஞாயிற்றக்கிழமை மாலை 2.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணி வரை நடைபெற்றது. இப்பள்ளி; 11 உறுப்பினர்கள் கொண்ட நிர்வாக சபையால் நிர்வாகிக்கப்பட்டு வருகின்றது. தொண்டு அடிப்படையில் சேவையாற்றும் ஆசிரியர்கள், அலுவலக உறுப்பினர்கள், உதவியாளர்கள் உட்பட 60 பேரைக் கொணட குழுவால் 420 மாணவர்களுக்கு இங்கே தமிழ் உட்பட கல்விச்சேவை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.