முன்னொரு காலத்தில் அங்கிரசர் என்றொரு ரிஷி, வனத்தில் வசித்து வந்தார். அவர் மிகவும் புகழ் பெற்றவர். அவரிடம் மாணாக்கர்கள் பலர் இருந்தனர். அவருடைய ஞானத்தில் இருந்து கணிசமான அனுகூலத்தை அவர்கள் பெற்றிருந்தனர் எனலாம். அந்த மாணவர்களில் சிலர், பக்தியும், கடமையுணர்வும் கொண்டவர்கள். மற்றவர்களைவிட எளிதில் எதையும் கிரகித்துக் கொள்ளக் கூடியவர்களாக அவர்கள் இருந்தனர். அவர்களுடைய நற்பண்புகள் காரணமாக மற்ற மாணவர்களால் அவர்கள் மதிக்கப்பட்டனர். ஆனால், அறிவுக் கூர்மையற்ற சிலர் மட்டும், அந்த நல்ல மாணவர்களிடம் பொறாமை கொண்டிருந்தனர். […]
ஈழத்தின் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் மு.ஆ.சுமன் தற்போது இங்கிலாந்து தேசத்தில் வசித்து வருகிறார். கவிதை எழுதுவதோடு மட்டுமல்லாது நடிப்புத் துறையிலும் தன்னை நிலைநிறுத்தி வரும் வல்வை சுமன் அவர்கள், பிச்சை, மனம், எதிர்வினை உள்ளிட்ட ஐந்திற்கும் அதிகமான குறும்படங்களில் நடித்துள்ளார். ‘1000 கவிஞர்கள் கவிதைகள்’ உலகளாவிய பெருநூலில் ஒருவராக இடம்பெறும் இவர், வாழ்வுதனை தேடி(2008) மரணித்த மனிதம்(2009) முகாரி பாடும் முகங்கள்(2014) ஆகிய கவிநூல்களை வெளியீடு செய்திருக்கிறார். ‘கலையோடு வாழ்வோம்’ எனும் இசை இறுவட்டினை வெளியீடு செய்த இவர், […]
என் தாய்த் தமிழே! நலம் கெட உன்னைப் புழுதியில் யார் எறிந்தார்!!! கருவாகச் சின்னத் தமிழ் ஒன்றைச் சுமந்ததினாலா? இன்று தெருவோரம் நீ புரண்டு உருமாறிப் போனாய்… கேடு கெட்ட இந்த மாந்தரிடம் என் சேயை மட்டும் காட்டு என்று வாய் வலிக்கப் பேசியே உன் கால் கடுக்க நின்றாயோ… உன் பிள்ளை இருப்பானா? மாட்டானா? என்று நெருப்போடு நீ […]
08.02.205 ஞாயிறு மாலை அய்யப்பன் கோயில் அரங்கில் வல்வை ஆனந்தன் (நடராஜா ஆனந்தராஜ் – முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் ) எழுதிய இரண்டு நூல் வெளியீட்டு விழா இனிது நடைபெற்றது. அடாது பனி பெய்த போதும் மக்கள் அரங்கை நிரப்பி இருந்தார்கள். மிகக் குறிய காலத்தில் அசுர வேகத்தில் நூல்கள் அச்சிடப்பட்டு வெளிவந்தன. நூல்களில் காணப்பட்ட உள்ளடக்கம் ஏற்கனவே உதயன், நமது ஈழநாடு போன்ற ஏடுகளில் வந்தவை. இதற்கு முன்னர் ஆசிரியரது ஆக்கங்கள் 16 புத்தக […]
சுவரில் இருந்த கடிகாரம் ‘டாண்… டாண்…’ பன்னிரண்டு முறை அடித்து ஓய்ந்தது. திடுக்கிட்டவளாக தன் நினைவுகளில் இருந்து மீண்டாள் சந்தியா. சாய்ந்திருந்த தூணில் இருந்து சற்று நிமிர்ந்தமர்ந்து பார்வையை சுற்றுமுற்றும் ஓடவிட்டாள். அவள் அருகில், அவளின் ஒரே மகனான ராஜு நன்கு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். அடுத்த அறையில் இருந்து வரும் ‘லொக்கு… லொக்கு…’ இருமல் ஒலி அவள் தாயாரின் உடல் நிலையை ஊருக்குகே பறைசாற்றியது. எதிரே கண்ணாடி பிரேமினுள் இருந்து அவளது அப்பா அவளை […]
ஓசை பிலிம்ஸின் முதற் தயாரிப்பாக கலைவளரி சக.ரமணாவின் “மாறு தடம்” எனும் முழுநீளத் திரைப்படம் உருவாக்கப்பட்டு சுவிஸில் வெளிவரவுள்ளது.இன்று உலகெங்கும் பரவிக்கிடக்கும் ஈழத்தமிழர்கள் பற்பல துறைகளில் தங்களை முன்னேற்றி மாபெரும் உலகத் தமிழ்ச் சமூகமாக மாற்றம் கண்டுள்ளனர். அவர்களுடைய உழைப்பு, புலம் பெயர்வு மற்ற சமூகங்களுடன் ஒப்பிடும்போது மிகப்பெரியது. ஒவ்வொரு துறைகளிலும் வெற்றி கண்டுவரும் இவர்கள், நாடகத்துறை, திரைப்படத்துறை போன்றவற்றில் பெரிதாக வளர்ச்சி காணவில்லை. அதற்கு தகுந்த தயாரிப்பாளர்கள், சந்தை மற்றும் ஒத்துழைப்பின்மை போன்ற பற்பல நடைமுறை […]
திரைப்பட இயக்குநர் சேரன் தானாக முன்வந்து வெளியிட்ட ஈழப்போர் வலிகள்… சாவித்திரி அத்துவிதானந்தன் எழுதிய போரும் வலியும் நேற்று கைக்குக் கிடைத்தது.. 19 வலி மிக்க படைப்புக்களைக் கொண்ட உண்மைச் சம்பவங்களை அடக்கிய சிறுகதைத் தொகுப்பு.. வாசிக்கத் தொடங்கிய சொற்ப நேரத்தில் கடைசிப்பக்கம் வந்துவிட்டது, ஆனால் அதற்குப் பிறகுதான் வலி ஆரம்பித்தது.. நெஞ்சில் உறங்கிக் கிடக்கும் ஈழப்போரின் துயரங்கள் மன உலையில் வெளிவந்து இரவு முழுவதும் விழித்திருக்க வைத்துவிட்டன. தேகத்தில் அல்ல தேகத்தை கட்டமைத்திருக்கும் ஒவ்வொரு செல் […]
உலக நாயகன் கமல் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள விஸ்வரூபம் படம் அமெரிக்கா, பிரிட்டனில் சக்கைப்போடு போடுகிறது. இந்த இரு நாடுகளிலும் விஸ்வரூபம் படத்துக்கு கடுகளவு எதிர்ப்பு கூட இல்லை. அமெரிக்காவில் 44 திரையரங்குகளில் விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டுள்ளது. பிரிட்டனில் 19 திரையரங்குகளில் விஸ்வரூபம் காண்பிக்கப்படுகிறது. இரு நாடுகளிலும் வெள்ளிக்கிழமை திட்டமிட்டப்படி படம் ரிலீசானது. வெள்ளி, சனி, ஞாயிறு 3 நாட்களும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடியது. இதனால் எதிர்ப்பார்த்ததை விட விஸ்வரூபம் கூடுதல் வசூலை அள்ளியுள்ளது. அமெரிக்க […]
லண்டனைத் தளமாகக் கொண்ட பிரபல போன்ஹாம்ஸ் தனியார் நிறுவனத்தினால் ஏலத்தில் விடப்படுகின்ற இலங்கையின் அனுராதபுர-காலத்தைச் சேர்ந்த சந்திரவட்டக்கல்லை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இலங்கை தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்தின் தலைமை இயக்குநர் கலாநிதி செனரத் திசாநாயக்க பிபிசி தமிழோசையிடம் கூறினார். கிட்டத்தட்ட 1300 ஆண்டுகள் பழமையான இந்த சந்திரவட்டக்கல் பிரிட்டன் பணத்தில் 50 ஆயிரம் பவுண்டுகள் வரை (இலங்கைப் பெறுமதியில் […]