பாக்கு நீரனையை முதன் முதலில் நீந்திக் கடந்து சாதனை புரிந்த மறத்தமிழனுக்கு நினைவுச் சிலை திறப்புவிழா 25.03.2015

பகவான் செய்த நவரத்தின மாலை! திரிலோசனதாசர் ஒரு பொற்கொல்லர். சிறு கிராமம் ஒன்றில் வசித்த அவர், கிருஷ்ண பரமாத்மாவிடம் ஆத்மார்த்தமான பக்தி கொண்டு, தினந்தோறும் ஸ்ரீகிருஷ்ண னுக்கு பாமாலை புனைந்து சூட்டி மகிழ்வார். அவர் மனைவி கனகாபாயும் அவரைப் போலவே தெய்வ பக்தி நிரம்பியவள். அந்த நாட்டின் அரசரான முகம்மது அலி, தன் மகள் சாந்த் பீபியின் திருமண நிச்சயதார்த்தத்துக்காக ஒரு வார காலத்துக் குள் அழகிய நவரத்தின மாலை செய்து தருமாறு திரிலோசனதாசருக்குக் கட்டளை இட்டார். […]
நாடாளுமன்றைத்தைவிட நாலாவது மாடிக்கே, தமிழ் அரசியல்வாதிகள் அடிக்கடி செல்கின்றார்கள். இதில் அதிக தடவைகள் நாலாவது மாடிக்கு அழைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி யார் என்று கேட்டால், அது நிற்சயமாக யாழ் மாவட்ட எம்.பி. சிறிதரன் என்று சிறுவர்களும் கூறுவார்கள். இப்போது விசாரணை என்பது பரிணாமமடைந்து, கைதுகளாக வளர்ச்சி பெற்று விட்டன. மே 18 ஆம் திகதி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செ. கஜேந்திரன், அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணன் உட்பட […]
ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைப்போர் முடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் முடிவுரும் நிலையில் ஐய்க்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைக் கூட்டத் தொடரில், இந்த ஆண்டும் அமெரிக்கா ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இலங்கை அரசு முள்ளிவாய்க்கால் போரில் மிகவும் கொடுமையான முறையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளது. ஈழத் தமிழர்கள்மீது திட்டமிட்டு இனப்படுகொலை நடத்தியது என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் சர்வதேச ஊடகங்கள் பலவாற்றாலும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையில்தான் அமெரிக்கத் தீர்மானம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கும் வகையில் இருக்கிறதா […]
அமெரிக்காவுக்கோ, மேற்கு நாடுகளுக்கோ ஈழத்தமிழர்கள் மீது காதல் கிடையாது. அவர்களுக்கென்று நீண்ட கால நோக்கிலான ஒரு நிகழ்ச்சி நிரல் உண்டு. அந்த நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்ட ஒரு கருவியே ஈழத்தமிழ் அரசியல். புதுடில்லிக்கும் ஈழத் தமிழர்கள் மீது காதலோ பாசமோ கிடையாது. அவர்களுக்கென்றும் ஒரு நிகழ்ச்சி நிரல் உண்டு. ஜெயலலிதாவிற்கும் ஈழத்தமிழர்கள் மீது பாசம் கிடையாது. அவருக்கும் வாக்கு வேட்டை அரசியலுக்குரிய ஒரு நிகழ்ச்சி நிரல் உண்டு. கருணாநிதிக்கும் அப்படி ஒரு நிகழ்ச்சி நிரல் உண்டு. ஆனால், […]
சர்வதேசத்தின் மனசாட்சியையும் உலுக்கிக் கொண்டிருக்கிறது அந்தப் புகைப்படம். தான் உட்கார வைக்கப்பட்டிருக்கிற பங்கரிலிருந்து மூன்றடி தூரத்தில் மரணம் நிற்பதைக்கூட அறியாமல் சுடப்போகிறவனே தனக்குக் கொடுத்த பிஸ்கட்டை வெள்ளந்தியாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற அந்தக் குழந்தையின் முகம் மனசாட்சி உள்ள எவரையும் உண்ண விடாது உறங்க விடாது. அந்தக் குழந்தையின் தந்தைதான் இன்றும் என்றும் கோடானுகோடி தமிழரின் பெருமைக்குரிய அடையாளம். மானத்தோடு வாழ எங்கள் இனத்துக்குக் கற்றுக்கொடுத்த அந்த மாமனிதனின் குழந்தை நயவஞ்சகமாகக் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ்க் குழந்தைகளின் அடையாளமாக […]
எத்தனையோ இன அழிப்பு ஆதாரங்களை சனல் 4 தொலைக்காட்சி முன் வைத்தாலும், இந்த சர்வதேச சமூக ஸ்தாபனங்கள் செவிமடுப்பது போல் தெரியவில்லை. இன அழிப்பிற்கான விசாரணைகளை ,கொலையாளிகளே நடாத்த வேண்டுமென விடாப்பிடியாக இருக்கிறது. தேசியத் தலைவரின் மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட காட்சிகள் முன்பு வெளிவந்த நிலையில், தற்போது அவர் கொல்லப்படுவதற்கு முன்பாக சிங்கள இராணுவத்தின் பிடியில் இருந்த புகைப்படமும் வெளியாகியுள்ளது. இதேபோன்று கேணல் ரமேசின் புகைப்படங்கள், காணொளிக் காட்சிகள் வெளி வந்தன. சரணடைந்த நிலையில் தோழர் […]
செய்தித்தாள்களிலும் – ஊடகங்களிலும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இரண்டாவது மகன் பாலச்சந்திரன் பற்றிய துயரச் செய்திகள் வெளியாகி கண்களைக் குளமாக்கி, மனதை ரணமாக்கிவிட்டது. சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற ஐ.நா. மற்றும் மேலை நாடுகளின் கோரிக்கைக்கு இணங்க, அவர் 2009-ஆம் ஆண்டு மே 19-ஆம் நாள் காலை 7.30 மணி அளவில் ஐந்து மெய்க்காப்பாளர்களோடு சென்று ராணுவத்திடம் சரணடைந்துள்ளார். பாலகன் பாலச்சந்திரனுடன் சென்ற ஐந்து பாதுகாப்பாளர்களையும் தனித்தனியே சுட்டுக்கொன்ற இலங்கை ராணுவத்தின் “53-ஆவது படையணி’ இறுதியாக, […]
யு-டியூப்’பில் வெளியிட்ட விடியோ மூலம் அமெரிக்காவுக்கு எதிராக பகிரங்கமாகப் போர்ப் பிரகடனத்தை வெளியிட்டுள்ளது வட கொரியா. கொரிய இளைஞர் கனவு காண்பதாகத் தொடங்கும் அந்த 3 நிமிட விடியோவில், வட கொரியாவில் இருந்து புறப்படும் ஏவுகணை, நியூயார்க் நகரைத் தாக்கி அழிப்பதாக முடிகிறது. அழிக்கப்படுவது அமெரிக்க நகரம்தான் என்பதை உணர்த்த அந்நாட்டு தேசியக் கொடியும் தீப்பிழம்புக்கு நடுவே தோன்றி மறைகிறது. இதன் பின்னணியில் “”நாங்கள்தான் உலகம்” என்று பிரபல பாப் பாடலின் இசை ஒலிக்கிறது. இந்த விடியோ […]
ஓரு நூற்றாண்டுக்கு பின்னர் இழந்த தமது இன அடையாளத்தினை மீளத் தேடும் பொருட்டு பொங்கல் திருநாளினை குவாட்லூப் தமிழர்கள் கொண்டாடியுள்ளனர். மத்திய அமெரிக்க கறேபியன் ( மார்ரீனிக் – குவாட்லூப் )தீவுகளுக்கு 1854ம் ஆண்டுகளில் கரும்புத் தோட்டங்களுக்கு கூலிகளாக கொண்டு செல்லப்பட்ட தமிழர்களாக இவர்கள் உள்ளனர். பிரென்சு அரசின் ஆளுகைக்கு உட்பட்டுள்ள இப்பகுதியில் ஓரு நூற்றாண்டினைக் கடந்து வாழ்ந்து வரும் இங்குள்ள தமிழர்கள் பல தலைமுறையினைக் கடந்துள்ள நிலையில் பிரென்சு மொழியினைப் பேசுகின்றவர்களாக உள்ளனர். தொடக்க காலத்தில் […]
கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின.பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். கண்காட்சியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பூம்புகார், காம்பே நகரங்கள் பற்றிய வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டது. கடலுக்கடியில் சென்று எடுக்கப்பட்ட முக்கியமான வீடியோ படங்கள் அவை. இந்திய நிலவியல் விஞ்ஞானிகள் மீனவர்கள் உதவியுடன் எடுக்கப்பட்டது. கடலுக்கடியில் நகரங்களின் சுவடுகள் ஆங்காங்கே உள்ளது. ஏறக்குறைய […]
எழும்தமிழீழம் ஐநாவின் அமர்வும் ஆய்வறிக்கை ஆவனமும் அனைத்ததையும் இழந்த அனாதைத்தமிழனக்கு ஆதரவளிக்குமா? இல்லை! அழுத்தமில்லா அறிக்கையாகி ஐநாசபையையும் அவமானப்படுத்துமா? இந்தியத்திருநாடு இங்கிருக்கும் தமிழனேயே இந்தியனாய் மதிப்பதில்லை நாய்களுக்கும் கேவளமாய் நாளும்காலில்போட்டு மிதிக்கிறது இனவெறியினிக்கும் சிங்களனாள் நாளும்சாகிறோம் நடுக்கடலில் இழங்கை இந்தியனின் நட்ப்புநாடாம் பிறகு நாமெல்லாம் யாராம்? குருதிக்கொதிக்கிறது குள்ளநரிகளின் கூட்டாட்டத்தை நினைக்கையிலே தீப்பட்டப்புன்னுக்கு திராவகமா தரும்மருந்து மூத்ததமிழனோ முத்தமிழறிஞனோ காசையும் கழகக்கண்மணிகளையும் கங்கரசிடமிருந்து காக்கவே கங்கனம்கட்டிபோராடுகிறார் தமிழனைக்காப்பது […]
பணம் எனும் மாய மான்! பணம் ஒரு விசித்திர மாய மான் அது தன்னை துரத்துபவர்களுக்குக் குட்டி போட்டு விட்டு ஓடிக்கொண்டே இருக்கிறது குட்டிகளில் திருப்தி அடயாத மனிதன் தாய் மானை பிடிக்கும் வேட்டையில் தவிக்க தவிக்க ஓடி மடிந்து போகிறான் கவிஞர்:கௌசல்யா
பொதுநலம்…..! யாரும் இல்லாத ஊரில் நாம் மட்டும் வாழ்திட வேண்டும் இது சுயநலம். மக்கள் வாழும் ஊரிலே நாமும் சேர்ந்து வாழ்ந்திடவேண்டும், ஏழைமக்களுக்கு உதவிகள் செய்திட வேண்டும் இது பொதுநலம் கவிஞர்:கவி.எஸ்
அம்மா….! உலகின் அத்தனை மொழிகளிலும் தேடினேன் உயிர் உள்ள வார்த்தை எது என …. ? எல்லா மொழிகளும் ஒரே அர்த்தம் உள்ள வார்த்தையைத்தான் சொல்லுது அம்மா என்று கவிஞர்:யாழ் நிலவன்