ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் சாத்வீக முறையிலான போராட்டங்களை மேற்கொண்டுவரும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியத் தலைநகர் லண்டனில் மூன்று ஈழத் தமிழ் இளைஞர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இன்று பி.ப 2:00 மணிமுதல் மத்திய லண்டன் பகுதியில் உள்ள இந்திய உயர்ஸ்தானியர் அலுவலகம் (INDIAN EMBASSY) முன்பாக மூன்று தமிழ் இளைஞர்களும் சர்வதேச மட்டத்தில் கவனயீர்ப்பை ஏற்படுத்தும் முகமாகவும், தமிழக மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாகவும் இப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
எந்த அமைப்புக்களின் பின்புலமும் இன்றி இளைஞர்கள் தாமாகவே முன்வந்து இப்போராட்டத்தை முன்னெடுத்திருப்பது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இது போன்ற போராட்டங்களே இனிவரும் காலங்களில் தமிழீழ மக்களின் துயர்களை களைந்து அவர்களின் சுதந்திர வாழ்விற்கு வழியமைக்கும்.












