யுத்த வெற்றியைக் கொண்டாடும் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் பராமுகமாய் உள்ளது. ஆகவே சர்வதேச அழுத்தங்கள் இலங்கை மீது மேலும் வலுவாக்கப்பட வேண்டுமென்று இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் தளத்தில் இலங்கையின் யுத்த வெற்றி தொடர்பில் தகவல் வெளியிடுகையிலேயே எரிக்சொல்ஹெய்ம் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். இவர் தொடர்ந்தும் கூறுகையில்:
இலங்கை அரசாங்கம் புலிகளுக்கு எதிரான போர் வெற்றியின் 4ஆவது ஆண்டை மிகவும் விமரிசையாக கொண்டாடியது. தேசிய யுத்த வெற்றி விழா என்று நாடளாவிய ரீதியிலும் பல நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. ஆனால், இலங்கையின் உள்நாட்டு யுத்தத்துக்கு காரணமாக இருந்த தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. எனவே, வலுவான அழுத்தங்கள் தொடர்ந்தும் தேவை எனக் குறிப்பிட்டிருந்தார்.












Leave a Reply