200 மைல் வேகத்தில் அமெரிக்காவில் சூறாவளி தாக்குதல் : 51 பேர் பலி

அமெரிக்க ஓக்லஹோமா மாகாண புறநகர் பகுதியை 200 மைல் வேகத்தில் வீசிய மிகப்பெரும் சூறாவளி நேற்று தாக்கியது.

சுமார் ஒரு கிலோ மீட்டர் அகலமுடைய இந்த சூறாவளிக்கு வீடுகள், பள்ளிகள் என பல இடங்கள் சூறையாடப்பட்டன. சில இடங்கள் தீப்பிடித்து எரிந்தன.
இந்த சூறாவளிக்கு பள்ளி குழந்தைகள் உள்பட 51 பேர் பலியாயினர். சூறாவளியால் தூக்கி வீசப்பட்ட பொருட்களுக்குள் சிக்கியிருந்த பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்த சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 120-க்கும் அதிகமான மக்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் 70 பேர் குழந்தைகளாவர். இவர்களில் பலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள 16 மாவட்டங்களுக்கு உடனடியாக அவசரநிலை உதவிகள் வழங்க ஓக்லஹோமா கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *