அமெரிக்க தூதரகமும், திருகோணமலை நகர சபையும் செய்து கொண்டுள்ள உடன்படிக்கை தொடர்பில் அரசாங்கம் எதிர்ப்பு

இலங்கை அரசாங்கத்திற்கு தெரியாமல், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகமும், திருகோணமலை நகர சபையும் செய்து கொண்டுள்ள உடன்படிக்கை தொடர்பில் அரசாங்கம், அமெரிக்க ராஜாங்க திணைக்களத்திடம் நேற்று தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
திருகோணமலை நகர சபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சியின் கீழ் உள்ளது. அமெரிக்காவின் கோனர் என்ற நிறுவனத்தை திருகோணமலையில் ஸ்தாபிப்பதற்காக இந்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டுள்ளது.
இவ்வாறான நிறுவனம் திருகோணமலையில் ஸ்தாபிக்கப்படுவது தொடர்பில் அரசாங்கம் கடும் சந்தேகத்தை வெளியிட்டுள்ளது. எகிப்து அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் கெய்ரோவில் உள்ள கோனர் நிலையம் சம்பந்தப்பட்டிருந்தது என்ற தகவல் தெரியவந்துள்ளதாகவும் திவயின கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *