எம்மைபற்றி
நாங்கள்…! நாங்கள் தமிழ் என்ற உன்னதமான மொழியை எமது தாய்மொழியாக கொண்டவர்கள்.தமிழீழம் எங்களின் தேசியம்.வல்வெட்டித்துறை என்ற பாரம்பரிய கப்பலோடும் துறைமுகநகரம் எங்களின் தாய்தந்தையர் பிறந்ததாய்மடி. இந்த இணையம் மூலம் எமது உணர்வுகளையும்,எமது ஊர்சார்ந்த செய்தி களையும்,புலம்பெயர்ந்து வாழும் எமது ஊரவர் பற்றிய நிகழ்வுகளையும், அறிவுப்புகளையும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம். எங்களது ஊர் என்பது தனித்த ஒரு தீவுஅல்ல.அது தமிழ்தேசியம் என்ற பெருமரத்தின் விழுதுகளில் ஒன்றாகவும்,தமிழீழதேசம் என்பதின் ஆழமான வேர்களில் ஒன்றாகவும் விளங்கிக்கொண்டு இருக்கிறது.
எனவே,தமிழ்தேசியத்தியத்தினதும்,தமிழீழதேசத்தினதும் விடியலுக்கான செய்தி களுக்கும் நாம் மிகமுக்கியத்துவம் கொடுக்கின்றோம். இந்த இணையம் தனித்த ஒருவருடையது அல்ல,தனித்த ஒரு குடும்பத்துடையதோ, தனித்த ஒரு கழகத்தினதோ சொத்து அல்ல. வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள் அனைவருடையதும் ஆகும். இதில் வரும் கருத்துக்களை மறுக்கவும்,விருப்பம்தெரிவிக்கவும்,விமர்சிக்கவும் அனைவருக்கும் உரிமை உள்ளது.உங்களின் ஆக்கபூர்வமானவிமர்சனங்களை நாம் ஏற்றுக்கொள்ள எந்நேரமும் தயாராக உள்ளோம்! வாருங்கள் அலைகடலின் அருகாக நடப்போம்.ஊரின் நினைப்போ
எம்மை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி : vvtuk26@gmail.com