அமரர் ஏகாம்பரநாதன் சத்யேந்திரா.31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

                                                                வல்வெட்டித்துறைநெடியகாட்டைப்பிறப்பிடமாகவும்,லண்டனைவசிப்பிடமாகவும்கொண்டிருந்தஏகாம்பரநாதன்சத்யேந்திராஅவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னார், ஏகாம்பரநாதன்அனுசுயாதம்பதிகளின்அருந்தவப்புதல்வனும்,

கோமதி(லண்டன்), ராதிகா(பிரான்ஸ்), காலஞ்சென்றமேகாமற்றும்செல்வம்(கனடா)அருமைச்சகோதரனும்,

வரதராஜ்(லண்டன்), லக்ஸ்மணன்(பிரான்ஸ்), சுரேஸ்குமார், (கனடா) ஆகியோரின்அன்புமைத்துனரும்,

அறிஞன், விதுஷன், நந்திகா, சங்கவி, பிரியா, மதுசாந், மயூரன்ஆகியோரின்அருமைமாமனாரும்

ஐயிரண்டு திங்கள் உன்ன சுமந்து இந்த பார் நீ பார்க்க
வழிஅமைத்த உன் அன்னையவள்
இன்று உன்னை காணாது தவிக்க..

முதல் எழுத்து உனக்களித்து தன்னெழுத்து நீ தழைக்க
வைப்பாயென காத்திருந்த உன் தந்தை
உனை பறிகொடுத்து பரிதவிக்க….

அன்புக்கும் பண்புக்கும் தம்பியென்றும்
அண்ணன் என்றும், மச்சான் என்றும் மாமா என்றும்
எல்லாமாய் ஒரு உருவாய் இருந்தவனே…

இன்று அருவமாய் மறைந்த மாயம் புரியாமல்
உன்னவர்கள் விறைத்து நிற்க…
விதிவென்று விட்டது தன் சதிவலையில் வீழ்த்தி விட்டது
எம் செல்வத்தை! நாம் என்ன செய்வோம் ஐயா…
காலனவன் பூநாகப்புற்றையல்லவா வளர்த்து விட்டான்
உன் பூவான மேனிக்குள்…

போதுமையா எம் செல்வமே நீ பட்ட வேதனைகள்
இந்த பாரினிலேயென்று சந்தோசமாய்
எமகு கண்ணீர் பூக்களை காணிக்கையாக்கி
இன்று விடைதருகிறோம்…
உன்னிடத்தில் நாம் வரும் முறை வரும்போது
எமக்காய் நீ அங்கு கத்திருப்பாய் என்ற நம்பிக்கையுடனே..

எங்கள் குடும்ப விளக்கு அணைந்த வேளையில் எமது துயர் துடைக்க நேரில் வந்து எமக்கு ஆறுதல் அளித்து தேற்றியோர், தொலைபேசி மூலம் ஆறுதல் கூறியோர், அன்னாரின் நிகழ்வில் கலந்து கொண்டோர், பல உதவிகளை செய்து எமக்கு உறுதுணையாய் நின்றோர் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டி நிகழ்வு 21-10-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 12:00 மணியிலிருந்து 4:30 மணிவரை லண்டனில் அமைந்துள்ள Lavender Mead, Lavender Park, Veals Mead Mitcham Sureey, CR4 3HL எனும் முகவரியில் உள்ள மண்டபத்தில் நடைபெறும், மற்றும் கனடா Tronto ல் அமைந்துள்ள 2360,  Birchmount Road, APT 616, Scarborough, Ontario, Canada MIT 2M4 அன்னாரின் தாயாரின் முகவரியில் நடைபெறுகிறது.

இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு அவரது ஆத்ம சாந்திக்காக பிரார்திக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்
ஏகாம்பரநாதன் அனுசியா
தொடர்புகளுக்கு
கோமதி வரதராஜ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447889152224
ஏகாம்பரநாதன் சேதுலிங்கம் — பிரித்தானியா
தொலைபேசி: +442086876722
அனுசுயா ஏகாம்பரநாதன் — கனடா
தொலைபேசி: +14165197354
ராதிகா லக்ஸ்மணன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33130300009
ஜெயக்குமார் தங்கவேலாயுதம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447545704939
செல்வம் சுரேஷ்குமார் — கனடா
செல்லிடப்பேசி: +16474066026

Leave a Reply

Your email address will not be published.