இந்திய கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு இன்மையால் வடக்கில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யுத்தம் காரணமாக வடபகுதியில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு பல அமைப்புக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைய கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு இந்திய நிறுவனமும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.
௭னினும் இந்த வருடம் நவம்பர் மாதத்துடன் இந் நிறுவனத்திற்கான நிதி ஒதுக்கீடு முடிவடைவதால் இப் பணிகளை முடித்துக்கொண்டு இந் நிறுவனம் வெளியேறவுள்ளது. இந்திய நிறுவனம் மன்னார் மாவட்டத்தில் வெள்ளாம்குளம் பகுதியில் தற்போது கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.