நான் எதிர்க்கட்சியில் இருந்த போதும் 13ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்ட போது அதனை ஆதரித்தேன். அந்த திருத்தத்தை நீக்கினால் ஆயுதப் போராட்டம் மீண்டும் வெடிக்கும்’ என்று கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் சிரேஷ் அமைச்சர்களில் ஒருவருமான டியூ குணசேகர தெரிவித்தார்.
அரசாங்கத்தின் கூட்டமைப்பிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சி 13ஆவது திருத்தத்தை ஆதரித்து கருத்து வெளியிட்டுள்ளது. அது ஒழிக்கப்படுமாயின் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க வழிவகுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
’13ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்ட போது தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்களில் அதை ஆதரித்த ஒரு சிலரில் தானும் ஒருவர் என நான் அப்போது எதிர்க்கட்சியில் இருந்த போதும் அதை ஆதரித்தேன்.
இந்த திருத்தத்தின் பின்னர் விடுதலைப் புலிகளைத் தவிர சகல தமிழ் தீவிர இயக்கங்களும் ஆயுதங்களை கைவிட்டன. அதை நாம் ரத்து செய்தால் அவர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டங்களை தொடங்கக்கூடும். அதனால் பயங்கரவாதம் மேலோங்கும்.
இவ்வாறான செயற்பாடுகளால் யுத்த வெற்றியாகக் கிடைத்த சமாதானத்தை பேண முடியாது. பிரச்சினைத் தீர்வுக்கான மாற்று ஏற்பாடின்றி 13ஆவது திருத்தத்தை நீக்கிவிடுவது அபத்தமானது’ என்றார்.