பிரித்தானியவின் தலைநகர் லண்டனில் அமைந்துள்ள இந்திய தூதுவராலயத்திற்கு முன்பாக 24.10.2012 கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு ஆதரவாக கவணஈர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில் பிரித்தானியாவில் உள்ள பல அமைப்புகள் பங்குபற்றி தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தார்கள்.
இப்போராட்டத்தை தமிழ் சொலிடாரிட்டி எனும் அமைப்பை வழிநடத்தும் திரு.சேனன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. சேனன்,பிரித்தானியாவில் உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் மற்றும் பலர் உரையாற்றினார்கள்.
கூடங்குளம் மக்களில் பக்கம் உள்ள நியாயங்களை எடுத்துக்கூறினார்கள். பிரித்தானியா வாழ் மக்கள் மட்டுமல்லாமல் பலதரப்பட்ட மக்களுக்கு போராட்டம் தொடர்பாக விளக்கமும் துண்டுப் பிரசுரமும் போராட்டக்காரர்களால் வழங்கப்பட்டது.
மாலை நான்கு மணிக்கு தொடங்கப்பட்ட போராட்டம் திட்டமிட்டபடி ஏழு மணிக்கு நிறைவுற்றது. இறுதியாக கூடங்குளம் மக்களின் கோரிக்கைகள் வெல்லும் வரை போராட்டம் ஓயாது தொடரும் இது ஓர் ஆரம்பம்தான் என்றும் அறிவிக்கப்பட்டது.