தேவை ஏற்படின் அரசியல் யாப்பின் 13அவது திருத்தச் சட்டத்தை இல்லாது செய்யப்படும் என்ற பொருளாதார, அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷவின் கருத்தினை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வன்மையாக கண்டித்துள்ளது . இது தொடர்பாக கருத்துரைத்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஹசன் அலி
இச் செயல் வடக்கு ,கிழக்கு மக்களை தமது சுதந்திரம் திடீர்ரென பறிபோய் விட்டது என்ற பீதிக்குள் தள்ளிவிடும் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதை விட்டுவிட்டு அதனை பெரிதுபடுத்தும் நடவடிக்கையாகும் . இதனால் விபரீதமான விளைவுகள் ஏற்படும் எனவும் முஸ்லிம் காங்கிரஸ் எச்சரித்துள்ளது .
13அவது திருத்தச் சட்டத்தை இல்லாது ஒழிக்க சர்வஜன கருத்துகணிப்பு நடத்தவும் தயார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக கருத்துகணிப்பு நடத்துவது ஆரோக்கிமானது அல்ல . அவ்வாறு கருத்துகணிப்பு நடத்துவது என்றால் தேசியரீதியில் அல்லது மாகாணரீதியிலேயே நடத்தப் படவேண்டும் .தேசிய ரீதியில் நடத்தப்பட்டால் பெரும்பான்மை சமூகம் ஆதரிக்கும் . மாகாண சபைகள் எங்கு தேவையோ அங்கு நடத்தப்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் .
வடக்கு கிழக்கு மாகாண சபைகள் தேவையா? இல்லையா? என்பதை வடக்கு ,கிழக்கு மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் .தெற்கிலுள்ள மக்கள் இதனை தீர்மானிக்க முடியாது. என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார் .