வல்வை முத்துமாரி அம்மன் கோவில் தர்மகர்தா சபையினால் நேற்றுமுதல் அறநெறிப்பாடசாலையின் அறநெறிவகுப்புகள் ஆரம்பமானது. இந்த அறநெறிவகுப்புக்களை ஆரம்பிப்பதற்காக வல்வை மாணவ மாணவிகளுக்கு பன்னிசை, கவிதை, கட்டுரை போட்டிகள் நடாத்தப்பட்டன.
இந்த போட்டிகள் தரம் ஒன்றிலிருந்து தரம் பதினொன்று வரை ஒவ்வொரு வகுப்புக்களாக நடாத்தப்பட்டது. இன்றும் போட்டிகள் நடைபெறுகின்றது. நேற்று நடந்த போட்டியில் இருநூறுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.