Search

மின்னொளியில் வல்வை நெடியகாடு இ. வி. கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரின்- SUPER 8ல் (16.03.2015 ) மோதிய அணிகள் விபரங்கள் உள்ளே.

நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில்(16.03.2015) அன்று மாலை நடைபெற்ற சூப்பர் 8 ஆட்டத்தில் அதிசக்தி விளையாட்டு கழகத்தை எதிர்த்து உடற்கல்வி ஐக்கியம் விளையாடியது. போட்டியில் எந்த கோல்களும் போடப்படாது சமநிலையில் முடிந்தது….

சென் மேரிஸ் அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி…………
நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில் (16.03.2015) அன்று மாலை நடைபெற்ற சூப்பர் 8 ஆட்டத்தில் பாசையூர் சென் அன்டனிஸ் விளையாட்டு கழகத்தை எதிர்த்து விளையாடிய நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டு கழகம் 1:0 என்ற கோல்க்கணக்கில் வெற்றிபெற்றது. மேரிஸ் அணி சார்பாக யூட் ஒரு கொலினை பெற்றுக்கொண்டார்.

ரோயல் அணி 4:0 என்ற கோல் கணக்கில் வெற்றி…………
நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில் அன்று (16.03.2015) மாலை நடைபெற்ற சூப்பர் 8 ஆட்டத்தில் வெற்றிலைக்கேணி சென் செபஸ்தியன் விளையாட்டு கழகத்தை எதிர்த்து விளையாடிய உரேழு ரோயல் விளையாட்டு கழகம் 4:0 என்ற கோல்க்கணக்கில் வெற்றிபெற்றது. ரோயல் அணி சார்பாக கஜகோபன் 2 கோல்களையும், சசிகரன்,சயந்தன் தலா ஒவ்வொரு கொலினையும், பெற்றுக்கொண்டார்.




Leave a Reply

Your email address will not be published.