Search

வன்னியில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்வாதார முயற்சிகள் 26.03.2015

வன்னியில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்வாதார முயற்சிகள்

கிளிநொச்சி மவட்டத்தில் இரணைமடுவில் இயங்கும் “மாற்றுத் திறனாளிகளுக்கான வன்னி புனர்வாழ் அமைப்பினால்,கிளிநொச்சி மாவட்டத்தில் வாழ்கின்ற சுமார் 80 மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்வாதார முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிறுவனத்தின் உதவிப்பணிப்பாளர் இருக்கும் வண.பிதா சூசைநாயகம் அடிகளார் கிளிநொச்சி பிரதேச அபிவிருத்தி வங்கியின் முகாமையாளர் திரு.கோ.சற்குணபாலன் மூலம் வாழ்வாதாரக் கொடுப்பனவுக் கடன் திட்டத்தை அறிமுகப் படுத்திய நிகழ்வு கிளிநொச்சி இணைப்பாளர் திரு.அன்ரன் தலைமையில் நடைபெற்ற பொழுது,வடமாகாண முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளரும்,பிரபல எழுத்தாளருமான வல்வை.ந.அனந்தராஜ் முதன்மை அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுவதற்காக அழைக்கப்பட்டிருந்தார். இத்திட்டத்தின் மூலம் பயனடையும் மாற்றுத்திறனாளிகள் தமது வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை அவர் விளக்கும் பொழுது,பின்வருமாறு குறிப்பிட்டார்:

“ஊனமுற்றவர்கள் என்று உலகில் எவரையும் வரையறுக்கமுடியாது.அவ்வாறு கை,கால்கள் இயங்காத அல்லது கண்பார்வையற்றவர்களை ஊனமுற்றவர்கள் என்று எவராவது கூறுவார்களேயாயின், உள்ளத்தால் ஊனமுற்றவர்கள் எமது சமுகத்தில் பல இலட்சம் பேர்,இருந்து கொண்டு ஒரு சமுகத்தையே அழித்துக் கொண்டு வருகின்றார் களே.அவ்வாறாயின் அவர்கள் தான் உண்மையிலேயே ஊனமுற்றவர்கள். என்பவர்கள், மற்றவர்கள் மீது பொறாமை கொள்ளுதல், வயிற்றெரிச்சல், பொதுச் சொத்துக்களைச் சூறையாடுதல், ஏமாற்றுதல், போன்ற சமுக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருபவர் களையே நாங்கள் ஊனமுற்றவர்கள் என்று அழைக்கவேண்டுமே ஒழிய,அவயங்களில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை உடையவர்களை ஊனமுற்றவர்கள் என்று அழைத்து அவர்களுடைய உள்ளத்தைப் பாதிக்கச் செய்யும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. ஆனால் ஒரு பாதை அடைக்கப்பட்டால்,ஆண்டவன் உங்களுக்கு இன்னுமொரு சரியானதும்,இவற்றைவிடச் சிறப்பானதுமான வேறு ஒரு பாதையைத் திறந்து விடுவார் என்பதை இங்கே இருக்கின்ற நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.உலகின் மிகப் பிரபலமான கவிஞர்கள், எழுத்தாளர்கள், பாடகர்கள், ஓவியர்கள்,விஞ்ஞானிகள்,விளையாட்டு வீரர்களில் பலர்,ஏதோ ஒரு வகையில் ஒரு அவயவக் குறைபாடுடையவர்களாக இழந்தாலும், இன்னொரு அவயவத்தினூடாக உலக சாதனையைப் படைத்தவர்களாகவே இருந்திருக் கின்றார்கள் என்பதை அவர்களுடைய வாழ்க்கையின் பயணத்தை அறிந்து கொண்டால், உங்களிடமும் மறைந்திருக்கின்ற ஆற்ற லைப் பயன்படுத்தி மற்றவர்களைவிட வாழ்க்கை யில் வெற்றி பெற்றவர்களாக வாழ வேண்டும்.இன்று உங்களுக்கு கிளநொச்சி பிரதேச அபிவிருத்தி வங்கியின் மூலம் வழங்கப்படும்,வாழ்வதாரக் கடன் திட்டம் ஒரு ஆரம்ப ஊக்குவிப்பாகவே இருக்கும். இத்தொகையை வைத்து,சரியான திட்டமிடலின் மூலம் செற்படுவீர்;களாயின், இன்றும் ஆறு மாதங்களுக்குள் உங்கள் வாழ்க்கைiயின் பாதை யையே மாற்றி அமைக்கமுடியும். எதற்கும் தன்நம்பிக்கையோடும், மன உறுதியோடும் வாழ்க்கையில் நீங்கள் காலடி எடுத்து வைப்பீர்களாயின் உங்களுடைய வாழ்க்கைத் தரம் மிக உயர்ந்த நிலைக்கு வருவதற்கு நீண்டகாலம் எடுக்காது……கடந்த காலத்தில் தமிழ் மக்கள் மீது அரசினால் திணித்த யுத்தத்தின் கோர வடுக்கள் இன்று பல இலட்சக் கணக்கான மாற்றுத் திறனாளிகளைத் தான் உருவாக்கியிருக்கின்றது.அதற்கு எதிர்நீச்சல் போட்டு எங்களுக்கு முன்னால் உள்ள அத்தனை சவால்களையும் வென்றெடுக்க வேண்டும்….” என்று குறி;ப்பிட்டு அங்கு சமுகமளித்திருந்த மாற்றுத் திறனாளிகளுக்கான நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றினார்.
“:வறோட்” (VAROD) எனப்படும் “மாற்றுத் திறனாளிகளுக்கான வன்னி புனர்வாழ்வு அமைப்பு (Vanni Rehabilitation Organization for the Differently Able) நிறுவனம், இதனைப் போன்ற செயற்பாடுகளை முல்லைத்தீவு,வவுனியா மாவட்டங்களிலுமுள்ள சுமார் 7500 மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்வாதார மேம்பாட்டு;ப பணிகளை மேற்கொண்டு வருவதாக வண பிதா சூசைநாயகம் அடிகளார்,தனது உரையில் தெரிவித்தார்.

“வாழ்வாதாரக் கடன்திட்டத்தின் நோக்கம்,பாதிக்க்பபட்ட எவருமே வறுமையில் வாடக்கூடாது எனபத்றகாகவே ஆரம்பக் கொடு;பபனவாக பணம் வழங்கப்படுகின்றது. வாழ்வாதாரக்கடன் மூலம் வங்கியினூடாகப் பேணப்படவேண்டிய உறவுநிலையை நம்பி;ககையுடன் வாடிக்கையாளர்கள் பேணிவரும் பொழுது, ஒருவர் தான் மேற்கொள்றும் அபிவிருத்திச் செயல் திட்டத்தின் வெற்றியைக் கவனத்தில் கொண்டு,ஒரு மாற்றுத் திறனாளிக்கு ஐந்து இலட்சம் ரூபாவரை எந்தவித பிணையுமில்லாது வழங்கப்படும.”; என்று கிளிநொச்சி பிரதேச அபிவிருத்தி வங்கி முகாமையாளர் திரு.கோ.சற்குணபாலன் குறிப்பிட்டார்.
அங்கு சமுகமளித்pருந்த பயனாளிகளுக்கு பணம் வழங்குவதற்கான ஒப்புதல் கடிதங்கள் விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டன. கிளிநொச்சியில் இயங்கும் மேற்படி நிலையத்தில் உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கான வலுவூட்டல் பயிற்சிகளும்,(Physiotherapy) மற்றும் மனவளர்ச்சி குறைந்தவர்களுக்குமான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
Leave a Reply

Your email address will not be published.