நெல்லியடி மத்தியமகா வித்தியாலையம் 8 விக்கெட்டினால் வல்வை சிதம்பரக்கல்லூரியை வென்றது.
இன்று நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சிதம்பராக்கல்லூரி அணித்தலைவர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். அதன்படி முதலில் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த சிதம்பராக்கல்லூரி 58 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
59 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லியடி மத்தியமகா வித்தியாலையம் தனது துடுப்பாட்டத்தை தொடந்தது. 2 விக்கெட்டுக்களை இழந்து 59 ஓட்டங்களை எடுத்து நெல்லியடி மத்தியமகா வித்தியாலையம் முதலாவது போட்டியில் வெற்றிபெற்றது.
இரண்டாவது போட்டி எதிர்வரும் சனிக்கிழமை கழுகுகள் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.