Search

மாவீர்களின் தியாகத்தினை ஈடுசெய்ய உலகத்தமிழர்கள் ஒன்றிணைந்த சக்தியாக மாறவேண்டும்- சிறிநிவாசராவ்.

நான் ஒரு மனித இனத்தினை சேர்ந்தவன் உலக சமாதானத்திற்காக அதாவது அணுஆயுதங்கள் இருக்ககூடாது என்று தெரிவித்து

அணுஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளுக்கு பயணம் மேற்கெண்டேன் இவ்வாறு செல்லும் வளியில் உலகத்தலைவர்கள் பலரை நான் சந்தித்தேன் இன்னிலையில்  முள்ளிவாய்க்கால் போர் எங்கள் உலக பயணத்தின் மாற்றத்தினை கொண்டுவந்து ஒரு நின்மதி இல்லாத மாற்றத்தினை உருவாக்கியது. முள்ளிவாய்காலில் போர் உச்சத்தில் இருக்கும் போது தமிழகத்கதில் அறவளி போராட்டங்களை எனது நண்பர்ககள் ஊடாக மேற்கொண்டேன்.

இந்த படுகொலைக்கு நீதிகேட்கவேண்டும் என்ற மனப்பான்மை எனக்கு அப்போதே தோன்னியது,இன்னிலையில் 180 நாடுகள் பங்கு கொண்ட பருவநிலை மாநாடு நடைபெற்றபோது அங்கு இனப்படுகொலை கண்காட்சியினை நாம்மேற்கொண்டோம், அதன்போதுகூட எனது வீட்டிற்கு அச்சுறுத்தல் தெரிவித்தார்கள், யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற வரியினை நாங்கள் உண்மையாக்கிக்கொண்டிருக்கிறோம்.

ஈழத்தில் ஆயுதப்போராட்டம் நடப்பதற்கு காரணமாக இருந்ததே இந்த இந்தியாதான் ஆயுதத்தினை கொடுத்து பயிற்சியினை கொடுத்து தங்கள் சுயநலத்திற்காக வேணும் என்றபோது போராடசொல்வதும் வேண்டாம் என்றபோது போராட்டத்தை கையவிட சொல்;வதும் என்ற தன்மையில் தமது கொள்கையில் வலுவாக இருந்த ஒரு அமைப்புத்தான் விடுதலைப்புலிகள் அமைப்பு, வட்டுக்கோட்டை தீர்மானத்தை கையில் எடுத்து எதிரிஎன்ன ஆயுதத்தினை பாவிக்கின்றானோ அதேஆயுதத்தை கையில் எடுத்து சரணடையாமல் முள்ளிவாய்க்கால் வரைக்கும் கொண்டு சென்றிருக்கின்றார்கள் அன்று விடுதலைப்புலிகள் தங்கள் போராட்டத்தினை கையளித்திருந்தார்களேயானால் இன்று நான் பேசிக்கொண்டிருக்க முடியாது,அந்த மக்கள் மேலும் பலமுள்ளிவாய்க்கால்களை சந்திக்ககூடிய சூழ்நிலை உருவாகியிருக்கும்,அதில் போராளிகள் செய்தது மண்ணுக்கா கடைசிவரையும் மாவீரர்களாககூடிய நிலைக்கு சென்றார்கள் அந்த மாவீரர்களின் தியாகங்களை நான் போற்றுகின்றேன்,அந்த மாவீரர்களின் தியாகங்களை பன்னிரெண்டு கோடி தமிழர்களும் ஒன்று திரண்டு ஜனநாயகரீதியாக பாரிய புரட்சியினை ஏற்படுத்தமுடியும்.

எக்காலத்திலும் தோல்லி மனப்பாங்கில் இருக்காதீர்கள், இந்த இனப்படுகொலை என்ற ஆயுதத்தினை நீங்கள் கையில் எடுங்கள் அதற்காக அடுத்த கட்ட பயணத்தினை உலகத்தில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்கும் பங்குண்டு என்று தமிழ்நாட்டில் இருந்து பலதடவைகள் சமூகவிடுதலைக்காக உலகினை சுற்றிவந்த சிறிநிவாசராவ் தமிழ்நெற் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வியில்கருத்து தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *