நியூயோர்க் நகர் இருளில் மூழ்கியுள்ளது வீதிகளில் வெள்ளப்பெருக்கு – காணொளி

அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தை தற்போது சாண்டி புயல் கடந்துசெல்கிறது அதன் தாக்கம் ரொறன்ரோவின் மத்திய பகுதிக்கும் ஏற்ப்பட்டுள்ளது. வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால் மின்சார விபத்துக்கள் மற்றும் வாகன விபத்துகள் ஏற்ப்பட்டுள்ளன இதனால் பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.

அமெரிக்காவின் நியூயோர்க் நகர் பெரும் வெள்ளப்பெருக்குக்கு உள்ளானதால் நகரப்பகுதி நிலக்கீழ் தொடருந்து பாதைகளில் நீர் புகுந்துள்ளது. வீதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. அரைமணி நேரத்தில் பத்தாயிரத்திற்கு மேற்ப்பட்ட அவசர அழைப்புகளை மக்கள் ( திங்கள் நள்ளிரவு) இரவிரவாக மேற்க்கொண்டுள்ளதாக மீட்புக் குழுவினரால் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 50 பேர்வரை இதுவரை உயிரிழந்திருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது. மிக மிக அவசர அழைப்புகளை தவிர சாதாண தேவைகளுக்கான அழைப்புகளை மேற்க்கொள்ள வேண்டாமென தொலைக்காட்சிகளில் அறிவிக்கப்படுகிறது. அதிபர் பராக் ஒபாமா அடிக்கடி தொலைக்காட்சிகளில் தோன்றி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு எச்சரித்துவருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.