Search

பலம் குறைந்த சூறாவளி முல்லைத்தீவுக்கு கிழக்கே நிலைகொண்டுள்ளது : வளிமண்டலவியல் திணைக்களம்


எதிர்பார்க்கப்பட்டதைப் போல நேற்றைய தினம் இலங்கையை சூறாவளி எதுவும் தாக்கவில்லை, எனினும், இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இந்த சூறாவளி இலங்கையை ஊடறுத்து செல்லலாம் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

தற்போது முல்லைத்தீவில் இருந்து 100 கிலோமீற்றர் தொலைவில் உள்ள தாழமுக்க நிலையில், இன்று பிற்பகலில் காங்கேசன் துறை ஊடாக இலங்கை கடற்பரப்பில் இருந்து வெளியேறும் என்று கூறப்படுகிறது.

இதனால் யாழ்ப்பாணத்தில் சிறிய அளவிலான சூறாவளி ஒன்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்ற வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

அதேநேரம் மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் கடற்பகுதி கொந்தளிப்பாக காணப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

பலம் குறைந்த சூறாவளி முல்லைத்தீவுக்கு கிழக்கே நிலைகொண்டுள்ளது : வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள பலம் குறைந்த சூறாவளி தற்போது முல்லைத்தீவுக்கு சுமார் 100 கிலோமீற்றர் கிழக்கே நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய பலம் குறைந்த சூறாவளி அந்த இடத்தில் இருந்து மேற்காக வடமேல் திசைக்கு நகரக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இன்று நண்பகல் 12 மணிக்கு பின்னர் இந்த சூறாவளி இலங்கையை கடக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றும் நாட்டின் அநேகமான பகுதிகளில் கடும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மின்பிறப்பாக்கி இயந்திரத்தின் விஷ வாயு சுவாசித்தமையினால் அவர்கள் இருவரும் உயிரிழந்திருக்கலாமனெ சந்தேகம்கொண்டுள்ள பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *