அமெரிக்காவின் நியூஜேர்ஸி கடற்கரையோரப் பகுதியைத் தாக்கிய சன்டி புயலில் சிக்கி 12 பேர் உயிழந்துள்ளனர்.
சான்டிப் புயலால் நியூயோர்க் உட்பட முக்கிய மாநகரங்கள் ஸ்தம்பித்துள்ளன.
போக்குவரத்து, வர்த்தக நிறுவனங்கள், பங்குச்சந்தை என நாட்டின் முக்கியமானவைகள் மூடப்பட்டுள்ளது.
மேற்கு வேர்ஜினியா முதல் வட கரோலினா மற்றும் கனெக்டிக்கட் பகுதிகளைச் சேர்ந்த 12 பேர் சான்டிப் புயலில் சிக்கி பலியாகியுள்ளனர்.
மேலும் 3 மில்லியன் மக்களுக்கான மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் நியூயோர்க் மாநகரப்பகுதியில் மாத்திரம் 1 மில்லியன் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த புயலால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நியூயோர்க் மாநகரம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
நியூயோர்க்கில் மட்டு சான்டி புயலில் சிக்கி 5 பேர் பலியாகியுள்ளனர்.