வல்வை செய்திகள்

வல்வெட்டித்துறை சந்தியில் இருந்து 752 பஸ் சேவை மீண்டும் இன்று ஆரம்பமாகியது. 06.04.2015

பருத்திதுறையில் சந்தியில் இருந்து வல்வெட்டித்துறை, ஊரிக்காடு மயிலியதனை மற்றும் தொண்டைமானாறு ஊடான யாழ் நகர் வரையான 752 பஸ் சேவை மீண்டும் இன்று ஆரம்பமாகியது.

இன்று மதியம் வல்வெட்டித்துறை நகரச்சந்தியில் வைத்து இந்த பஸ் சேவையை, பிரதி அமைச்சர் திருமதி விஜகலா மகேஸ்வரன், வடமாகாணசபை உறுபினர்கள் டெனீஸ்வரன் மற்றும் சிவாஜிலிங்கம், போக்குவரத்துசபை பிராந்திய முகாமையாளர் அஸ்வர், பருத்தித்துறை பிரதேசசபை பிரதேச சபை செயலர் T.ஜெயசீலன், இ.போ.ச பருத்தித்துறை முகாமையாளர் கந்தசாமி, பருத்தித்துறை கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜேசுதாஸ் ஆகியோர் கூட்டாக ஆரம்பித்து வைத்திருந்தனர்.

பருத்திதுறையிலிருந்து யாழ் நகருக்கான 3 பிரதான பஸ் சேவைகளில் ஒன்றான இந்த சேவை 1990 ஆம் ஆண்டிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தது.குறிப்பிடத்தக்கது விஜகலா மகேஸ்வரன் தொடர்ந்து பேசுகையில் தலைவர் பிரபாகரன் தான் இன்று வெற்றி பெற்றுள்ளார். என கூறியிருந்தார்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *