ராஜீவ் படுகொலை தூக்கு கயிற்றில் நிஜம் என்ற நூலை சகோதரர் திருச்சி வேலுச்சாமி அவர்கள் என்னிடம் அணிந்துரைக்காக வழங்கியபோது சில நிமிடங்கள் திகைத்து விட்டேன் ,காரணம் இந்த நூலில் பக்கங்கள் அதிகம் . .தொடர்ச்சியான வேலை பளுவிற்கு இடையிலும் இதனை உடனடியாக ,முழுமையாக படித்து அணிந்துரை வழங்க முடியுமா ? என்று எண்ணினேன் .

ஆனால் கையில் கையில் எடுத்தேன் கீழே வைக்க முடியவில்லை. நிகழ்வுகளின் நிதர்சனமாக நிஜங்களின் அணிவகுப்புகளாக இந்நூல் விளங்குகிறது என்றால் அதுமிகையல்ல.பொதுவாக அரசியல் ஆளுமை கொண்டவர்களை சிங்கம் என்றும் புலி என்றும் சிறுத்தை என்று வர்ணிக்கப்படுவது வாடிக்கை .ஆனால் என் சகோதரர் திருச்சி வேலுச்சாமி அவர்களை வெண்கலகடைக்குள் புகுந்த யானை என்று அழைத்தால் அது பொருத்தமாக இருக்கும்.ஆம் அதிரடிகளும் சர வெடிகளும் நிறைந்த இந்நூல் உண்மை விரும்பிகளுக்கு விருந்தாகவே அமையும் என எதிர்பார்க்கலாம். தமிழக அரசியல் தளத்தில் முக்கிய தலைவர்களின் பன்முகங்களை படம்பிடித்து காட்டுகிறார் திருச்சியார். . அந்த தலைவர்களின் பலவீனகளை மட்டும் இன்றி பலர்களையும் குறிப்பிட்டு தனது பெருந்தன்மையை நிரூபிக்கிறார். தேசமே துயரத்தில் ஆழ்ந்த நிகழ்வான ராஜீவ்காந்தி படுகொலையில் இந்தியாவின்மனசாட்சியை தட்டியெழுப்ப தனது எழுதாயுதத்தால் பாடுபடும் திருச்சி வேலுச்சாமியின் பணி பிரமிக்கத்தக்கது. தான் அறிந்த உண்மைகளை உலகுக்கு சொல்லவேண்டும் என்ற சிறந்த நோக்கம் இருட்டு மனம் படைத்த சில போலிகளின் முகத்திரையை சமரசமின்றி நேரடியாக
குத்தி கிழிக்கிறது இவரது பேனா முனை . மொத்தத்தில் இவரது பேனாவில் அஞ்சாமை எனும் மை ஊற்றி எழுதி இருப்பதை புரிந்து கொள்ளமுடிகிறது. . ராஜீவ் படுகொலை தூக்கு கயிற்றில் நிஜம் என்ற நூல்

விற்பனையிலும் உண்மை கருத்தியல் பரப்புதலிலும் சிகரம் தொடும் என்பது திண்ணம். .

சகோதரர் திருச்சி வேலுச்சாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அன்புடன்

முனைவர் எம்,எச், ஜவாஹிருல்லா

சட்டமன்ற உறுப்பினர்

,இராமநாதபரம் தொகுதி

மனிதநேய மக்கள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *