ஓபாமா அழுதுவிட்டார்: கோரமாக மாறிய அமெரிக்கா !

அமெரிக்காவின் அட்டலான்டிக் கரையோரத்தை கடும் புயல் தாக்கியுள்ளது. பல கட்டடங்கள், வீடுகள், பாடசாலைகள் தொழிற்சாலைகள், என்று அனைத்து இடத்தையும் இப் புயல் தாக்கி அழித்துள்ளது. வீடுகளை இழந்து மக்கள் வேலையையும் இழந்து நடுத்தெருவில் நிற்கிறார்கள். இவர்களில் பலரை அமெரிக்க அவசர உதவிப் பிரிவினர் அப்புறப்படுத்தி வருகின்றனர். இதேவேளை தனது சொந்த வீட்டை, வெள்ளம் அடித்துச் சென்ற நிலையில், அப்பகுதியில் நின்று தனது வீட்டு அழிந்துபோன இடத்தில் நின்று அழுதுகொண்டு இருந்த பெண்மணியை ஆகாயத்தில் இருந்து பார்த்த பராக் ஒபாமா, தனது உலங்கு வானூர்தியை அவ்விடத்தில் தரையிறக்கச் சொல்லியுள்ளார்.

அப் பெண்மனை அணைத்து அவரது சோகத்தில் பங்கெடுத்த ஓபாமா, நிச்சயம் நிவாரணங்கள் கிடைக்க உடனடி உதவிகளைச் செய்யவிருப்பதாகக் கூறினார். அத்தோடு அட்டலான்டிக் கரையோரத்தை, உலங்குவானூர்தி மூலம் பார்வையிட்ட அவர் கண்கலங்கிய காட்சிகளும் தொலைக்காட்சிகளில் வெளியாகி மக்கள் மனதை நெருடியுள்ளது. இதனால் நடைபெறவிருக்கும் அமெரிக்க தேர்தலில், பராக் ஓபாமாவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக சில கருத்துக் கணிப்புகள் சொல்கிறது.

புயல் இன்னும் ஓயாத நிலையில், உலங்குவானூர்தியில் செல்வது ஆபத்து என்று தெரிந்தும், அவ்விடத்துக்கு பராக் ஓபாமா சென்றுள்ளார் என்றும் மேலும் தெரிவிக்கப்படுகிறது. ஓபாமாவின் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கடுமையாக எச்சரித்துள்ள நிலையில் கூட அவர், புயல் தாக்கிய இடங்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது. இப்படி இருப்பார்களா இலங்கையில் உள்ள சிங்களத் தலைவர்கள்.

Leave a Reply

Your email address will not be published.