செய்திகள்

ஐந்து விருதுகளை பெற்ற மட்டக்களப்பு இளைஞனின் நானும் ஒரு தாய் குறும்படம்

மட்டக்களப்பு இளைஞனால் தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட நானும் ஒரு தாய் குறும்படத்திற்கு ஐந்து விருதுகள் கிடைத்துள்ளது. இந்த குறும்திரைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகரில் உள்ள தயாமோட்டோஸ் பங்களாளர் பத்மநாதனின் புதல்வனும், தென்னிந்திய திரைப்பட இயக்குனர் பாலு மகேந்திராவின் மாணவருமான கோவர்த்தனன் இந்த படத்தை தயாரித்துள்ளார். மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் உயர்தரம் வரை கற்ற இவர் தமிழகத்தில் உயர்கல்வி கற்று வந்த போது குறும்திரைப்பட தயாரிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக தென்னிந்திய திரைப்பட இயக்குனர் பாலு மகேந்திராவிடம் 3மாத நடிப்பு பயிற்சியும் ஒருவருட இயக்குனர் பயிற்சியும் பெற்ற பின்னர் நானும் ஒரு தாய் என்ற இந்த குறும்படத்தை தயாரித்துள்ளார்.

இந்த குறும்திரைப்படம் இந்தியாவில் 5விருதுகளை இதுவரை பெற்றுள்ளது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *