தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடகங்களைப் பயன்படுத்தி தாக்குதல்களை தொடர்ந்து வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகங்களைப் பயன்படுத்தி தமது போராட்டத்தை புலிகள் ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தத்துக்காக ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காக பாரிய அளவில் நிதியை செலவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று போராட்டத்தில் கொல்லப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களின் பெற்றோரை பராமறிப்பதற்காகவும் அவர்கள் பாரிய தொகையை செலவழித்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு ஊடகப் பிரச்சாரங்களுக்கான இந்த நிதியைப் பயன்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். உலக ஊடகங்களின் மீது அழுத்தம் செலுத்தக் கூடிய அளவிற்கு புலிகளிடம் பணம் இருப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இந்தப் பணத்தைக் கொண்டு இலங்கைக்கு எதிராக தீவிர பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்