வல்வை அணிக்கும் புதுக்குடியிருப்பு (கோம்பாவில் ) உதிக்கும் திசை அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ உதைபந்தாட்டம்(11 நபர் ,5 நபர் ) மற்றும் மென்பந்தாட்டம் ஆகிய போட்டிகள் இன்று நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்திலும் வல்வை பொது விளையாட்டுமைதானத்திலும் நடைபெற்றது. மென்பந்தாட்ட போட்டியில் (12 ஓவர் ) முதலில் துடுப்பெடுத்தாடிய உதிக்கும் திசை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 52 ஓட்டங்களை எடுத்தது.53 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி எனும் முனைப்புடன் களம் புகுந்த வல்வை அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 53 ஓட்டங்களை எடுத்துவெற்றிபெற்றது .அடுத்து 11 நபர் கொண்ட உதைபந்தாட்டம் நடைபெற்றது.அதில் 1 : 0 என்ற கோல் ரிதியில் வல்வை அணி வெற்றிபெற்றது. அடுத்து வல்வை பொது விளையாட்டுஅரங்கில் 5 நபர் கொண்ட உதைபந்தாட்ட போட்டி இரு பிரிவுகளாக நடைபெற்றது. அதன் முடிவுகள் பின்வருமாறு
வல்வை A எதிர் உதிக்கும் திசை A (6 : 3 என்ற கோல்கணக்கில் வல்வை A வெற்றி )
வல்வை B எதிர் உதிக்கும் திசை B ( 13 :6 என்ற கோல்கணக்கில் வல்வை A வெற்றி )