மன்னார் திருக்கேதிஸ்வர ஆலய சூழலில் கடந்த 6 மாதத்திற்கு முன்னர் தனியார் காணியில் அமைக்கப்பட்ட புத்தர் சிலைக்கான ஏனைய கட்டுமானப்பணிகள் பலரது எதிர்ப்பினால் தடைப்பட்டது.
இந்த நிலையில் தொல்பொருள் திணைக்களத்தில் இருந்து காணியை அளவீடு செய்து புத்தர் சிலை அமைப்பதற்கான வழிவகைகளை செய்யுமாறு கோறி மன்னார் பிரதேச செயலாளருக்கு கடந்த வாரம் கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தேசிய மதம் பௌத்த மதம் என்பதினால் அவற்றை அமைப்பதற்கு அதிகாரிகள் தடையாக இருக்கக்கூடாது எனவும், நடு நிலமையாக அதிகாரிகள் செயலாற்ற வேண்டும் எனவும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.