யாழ். வல்வை சிதம்பராக் கல்லூரியில் கடந்த பல ஆண்டுகளின் மேலாக இயங்க முடியாத நிலையிலிருந்த விஞ்ஞான ஆய்வுகூடத்தின் புனரமைப்பு வேலைகள் துரிதமாக ந்டைபெற்றுவருகிறது.
சிதம்பராக் கல்லூரியானது 1985 இற்கு முற்பட்ட காலப்பகுதிகளில், யாழ் மாவட்டத்திலேயே முன்னணித் தரத்திலான விஞ்ஞான ஆய்வுகூட வசதிகளை கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது புலம்பெயர் வாழ் வல்வை நலன் விரும்பிகள், மற்றும் சிதம்பராக்கல்லூரியின், பழைய மாணவர்களின் ஆதரவுடன் மீண்டும் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.