உலக நாடுகளில் இருந்து வருகை தந்த எம்.பீக்களோடு இம் மாநாடு நடைபெறுகின்றது. தமிழ் நாட்டில் இருந்து தி.மு.க செயலாளர் மு.க.ஸ்டாலின் அவர்கள், த.பாண்டியன், டி. ராஜா, தொல்.திருமாவளவன், உட்பட பல முன்னணி கட்சியின் தலைவர்கள் இதில் கலந்துகொள்கிறார்கள். அதுமட்டுமல்லாது தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து, சுரேஷ் பிரேமச்சந்திரன், ஸ்ரீதரன் ஆகியோரும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் இதில் கலந்துகொள்கின்றனர். இறுதிப் போரில் கொல்லப்பட்ட மக்களுக்கான சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என வலியுறுத்தும் தீர்மாணமும் இங்கே நிறைவேற்றப்படவுள்ளது.
இதில் பிரித்தானிய எம்.பீக்கள் 51 பேர் கலந்துகொள்கின்றனர். பிரித்தானியப் பாராளுமன்றத்தில் இருந்து மூன்றில் ஒரு பங்கு என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வளவு பெருந்தொகையான எம்.பீக்கள் இதில் கலந்துகொள்வதால், இம் மாநாட்டில் நிறைவேற்றப்படவிருக்கும் தீர்மாணமும் மிக முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது. கனடா, மலேசியா, மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உள்ள எம்.பீக்களும், கவுன்சிலர்களும் இம் மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.
மேலதிக தகவல்கள் தொடர்ந்தும் வெளிவரும்