வல்வை செய்திகள்

புங்குடுதீவு மாணவி சகோதரி வித்தியாவின் கொலையைக் கண்டித்தும் நீதி வழங்கக் கோரியும் யா வல்வை சிதம்பார கல்லூரி நீதிகாண் போராட்டமும் கண்டணக் கூட்டமும் நடைபெற்றது 20.05.2015

புங்குடுதீவு மாணவி சகோதரி வித்தியாவின் கொலையைக் கண்டித்தும் நீதி வழங்கக் கோரியும் யா வல்வை சிதம்பார கல்லூரி நீதிகாண் போராட்டமும் கண்டணக் கூட்டமும் நடைபெற்ற போது புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா வன்புனர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து. வல்வை சிதம்பார கல்லூரி மாணவர்களின் கவனயீனப்போரட்டம் அக் கல்லூரி அதிபரின் தலைமையின் கீழ் 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு ஆசிரியர் ஆசிரியர்களின் கருத்தரங்கு பேச்சு சகோதரி வித்தியாவின் கவிதை அதிபர் அவர்களின் பேச்சு ஒழுக்க ஆக்கக்கருத்துக்கள் இடம் பெற்றது இறுதியில் ஆலய மணி ஒசையுடன் இரு நிமிட அகவணக்கப்பிரார்த்தனை அதிபர் ஆசிரியர்கள் மாணவச்செல்வங்கள் எமது இணைய செய்தியாளர் ஆகியோரினால் தங்கை வித்தியாவிற்கு நீதி வேண்டியும் ஆத்ம சந்தியடையவும் இறைவணை பிரார்த்தித்ததோடு நீதிகாண் போராட்டமும் கண்டணக் கூட்டமும் நிறைவடைந்தது.
இங்கு குறிப்பிடத்தக்கது அதிபர் ஆசிரியர்களின் பேச்சின் வெளிப்பாடக அமைந்த சில விடயங்கள் ஆண்வர்க்கத்தை சேர்ந்த இளஞர்கலலூம் இப்போராட்டகள் நடத்தப்படுகின்றது ஆகவே குற்றம் செய்த செய்கின்றர்களே தண்டிக்கபடவேண்டியவர்கள் ஒட்டுமொத்த ஆண்வர்க்கத்தினர் அல்ல. மாணவ மணவர்கள் சகோதரர்களாக பழகவேண்டும் மற்றும் நடைமுறை ஒழுக்கங்கள் கருத்துதெளிவாக்கம் இடம் பெற்றது. இன்னொரு ஆசிரியர் ஒட்டுமொத்த ஆண்வர்க்கத்தினர் அல்ல அவர்ளில் பலர் ஒழுக்க சீலர்களாக உள்ளார்கள். மேலும் அதிபர் கூறிய கருத்துக்கள் சில இங்கு தற்பொழுது நிழல் யுத்தம் நடைபெறுகின்றது போதை வஸ்து பாவணை அதிகரித்து இளைஞர்கள் யுவதிகள் அடிமையாகி அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் அடிமையாகி சமூக சீர்கேடுகளை செய்து கொண்டு இருக்கின்றகள். ஆவை கல்விகற்கும் மாணவர்களிடமும் பரவி அந்த சமூகத்தின் கலாச்சாரத்தை சீர்குலைத்து அந்நாட்டின் முள்ளம்தண்டு பொருளாதாரமாக விளங்கும் மாணவர்களை சீர்குலைப்பன் மூலம் அந் இனத்தின் மகிமையையும் இனத்தையும் அழித்தொழித்து விட்டுவிடும் என கூறினார்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *