Search

வல்வை ஊரணியில் பிறந்து தென்னமரவாடி கிராமத்தில் கிராம சேவையாளராக கடமையாற்றிய இவர் பற்றிய பதிவு

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் தென்னமரவாடி விதானையார் என்று பலராலும் அறியப்பட்ட திரு சுப்பிரமணியம் -வைரமுத்து (விதானையார் ) இன்று( 21.05 vairamuththu.jpg 22015 ) இறைபதம் அடைந்தார் .
இவர் தென்னமரவாடியில் 40வருடங்கள் வரை கிராமசேவையாளராக கடமையாற்றியதுடன் .இனம்சர்ந்து பல நல்ல விடயங்களை சாதித்து ஒரு குக்கிராமத்துடன் நின்றுவிடாது இலங்கைத்தீவு முழுவதிலும் அறியப்பட்டவராக விளங்கினார்.

பொத்துவில் முதல் புத்தளம் வரை பல்வேறு தரப்பு மக்களிடமும் செல்வாக்குப் பெற்றிருந்த இவர் திருகோணமலை, குச்சவெளி, புல்மோட்டை, கொக்குளாய் ,கொக்குத்தொடுவாய் செம்மலை என்று பல்வேறு கிராமங்களிலும் செல்வாக்குப்பெற்ற நபராக விளங்கினார் .
1950- 1970 களில் தமிழரசுக்கட்சி. தமிழ்க் காங்கிரஸ் கட்சி இரண்டிலும் இணைந்து செயற்ப்பட்டவர் . அப்போது திருகோணமலையில் பாராளுமன்ற த்தேர்தலில் போட்டியிடக்கிடைத்த சந்தர்ப்பத்தை தானாக முன்வந்து தவிர்த்துக்கொண்ட இவர் பதவியா சிங்களக்குடிஏற்றத்தை ஆரம்பத்தில் கடுமையாக எதிர்த்து பல்வேறு அரசியல் போராட்டங்களை முன்னெடுத்தார்.

ஆயினும் அந்தப்பிராந்திய தமிழ் மக்களின் போதிய அரசியல் விழிப்பின்மை காரணமாகவும் செறிவின்மை காரணமாகவும் போராட்டங்கள் பெரிதாக வெளியுலகம் அறியாமல் போனது .ஆயினும் தென்னமரவாடி மட்டுமின்றி குச்சவெளி ,திரியாய் ,கந்தளாய் போன்ற கிராமங்களில் பெரும்பான்மையினரின் குடியேற்றத்தை முடிந்தளவு மட்டுபடுத்த இன்றளவும் முடிந்தது .
இலங்கையில் இனக்கலவரங்கள் ஏற்பட்ட காலங்களில் இவரை குறிவைத்தும் சிங்களகாடையர்கள் வருவதுண்டு . ஒன்றல்ல பலதடவை இவர்மேல் இனவாத தாக்குதல் முயற்ச்சி மேற்கொள்ளப்பட்டது .ஆயினும் சிங்கள பிரபலங்களுடன் இவருக்கிருந்த நட்பும் முஸ்லிகளை இவர் அனுசரித்து நடந்த விதமும் இவரை இக்கட்டான காலங்களில் தப்பித்துவாழ உதவியது .

ஆறடி உயரமும் பலமான உடற்கட்டும் கொண்ட இவரை பதவியா சிங்களவர்கள் இரும்பு மனிதன் என்ற பொருள்பட “ஜக்கடையா வைரமுத்து மாத்தையா “என்று அழைத்து நட்பு பாராட்டுவர்.அஞ்சா நெஞ்சுடன் எந்தச் சூள்நிலையிலும் நீதிக்காக துணிச்சலோடு குரல்கொடுத்த மனிதராக விளங்கினார் .
தென்னமரவடியில் நெல்வயல், கரும்பு வயல், மற்றும் மாட்டுப்பணனை போன்றவற்றை சொந்தமாக நிர்வகித்து பெரும் பணத்தை சபாதித்து பிராந்திய செல்வந்தராகவும் வாழ்ந்துவந்தார் .
ஆயுதப்போராட்டம் தொடங்கிய காலத்தில் இவர் தனது கிராமசேவகர் உத்தியோகத்தை விட்டு ஒய்வு பெற்று தனது பிறந்த ஊரான வல்வெட்டித்துறைக்கு வந்து வாழத்தொடங்கினார் .அப்போது விடுதலைப்புலிப் போராளிகளுக்கு உணவளிப்பதுமுதல் அவர்களுக்காக சிறிய சிறிய உதவிகளையும் செய்து தனது பங்களிப்பைச் செய்துவந்தார் .

இந்திய இராணுவம் வந்திருந்த காலப்பகுதியில்இந்திய இராணுவத்தினரும் விடுதலைப்போராளிகளும் மோதலில் ஈடுபட்ட போது முன்வாசலில் இந்திய இராணுவ உயரதிகாரிகளோடு இவர் ஆங்கிலத்தில் உரையாடிக்கொண்டிருக்க வீட்டின் கூரையிலோ இன்னோர் அறையிலோ போராளிகள் மறைந்திருந்த சம்பவங்கள் கூட நடந்ததுண்டு .

சற்றேனும் பதட்டமோ இயல்பில் மாற்றமோ காட்டாது போராளிகளை பாதுகாத்த துணிச்சல் மிக்க மனிதராவார் . இவரை `விதானை ஐயா `என்று போராளிகள் அழைத்தார்கள் .
இவர் இந்தியாவில் திருச்சிராப்பள்ளி யிலும் பின்னர் லண்டனிலும் வாழ்ந்து வந்தார் . இவர் தனிமனிதனாக நின்று ஆற்றிய சில பங்களிப்புக்கள் எமது இனத்தின் இருப்பை இன்னும் பல்லாண்டுகாலம் நிமிர்த்தி வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை .

-வன்னி நிலவன்-
Leave a Reply

Your email address will not be published.