வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் வல்வை விளையாட்டுக்கழகத்திற்குற்பட்ட கழகங்களுக்கிடையிலான 9நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்று வருகின்றது இன்று நடைபெற்ற அரை இறுதியாட்டத்தில் முதலாவது வல்வை றெயின்போ விளையாட்டுக்கழகம் எதிர் வல்வை ரேவடி ஜக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகம் மோதியது. இதில் ரேவடி ஜக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகம 1;:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இரண்டாம் சுற்றில் வல்வை இளங்கதீர் விளையாட்டுக்கழகம் எதிர் வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகம் மோதியது இதில் வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகம் 2:1 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றுள்ளது இன்றைய அரை இறுதியாட்டத்தில் வெற்றி பெற்ற இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.