பரிதியின் சாவு சொல்லும் செய்தி-காசியானந்தன்!

முள்ளிவாய்க்கால் முடிவு அல்ல என்பதை நிறுவி பரிதி தன்சாவினால் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடர்ச்சியை பதிவு செய்து நிமிர்ந்து நிக்கின்றான் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் வரலாறு தொடர்கின்றது என்று அவனது சாவினால் ஓங்கி முரசொலிக்கின்றான் என்று உணர்ச்சி கவிஞர் காசியானந்தன் தெரிவித்துள்ளார். (ஒலிவடிவம்)

பரிதி பிரான்சில் மாவீரராக வரலாற்றில் நிமிர்ந்து நிக்கிறான் இதுஒரு துயரமான நாளாக நாங்கள் நினைத்தாலும் தமிழீழ மக்களின் விடுதலைப்போராட்ட வரலாற்றில் இதுஒரு நிமிர்ந்த நாள் வரலாற்று ஏட்டில் என்றும் மறக்கமுடியாத வலிமைபெற்ற நாள் என்றுதான் நான் சொல்லுவேன்
ஏன் என்றால் ஒரு மாபெரும் வீரன் தமிழீழவிடுதலை போராட்ட வரலாற்றை பதிவு செய்துவிட்டு கண்களை மூடியுள்ளான்அவனை படுகொலை செய்தவர்கள் இன்று தமிழீழ மக்களிடையே குறிப்பாக புலம்பெயர் தளங்களிலும் கொழுந்துவிட்டு எரியும் உணர்ச்சிகளை பார்த்தால் அவர்கள் சோர்ந்துபோவார்கள் சுறுண்டுபோவார்கள்.
நாம் திட்டமிட்டு செய்த இந்த படுகொலை ஒருபேரியக்கத்தின்வளர்ச்சியாக ஒரு மாபெரும் வரலாற்று வீரனின் தலை நிமிர்வாக ஆகிவிட்டதே என்று தலைகுனிந்து நிற்பார்கள்.

உண்மையில் பரிதியின் மறைவு விடுதலைப்போராட்ட வரலாற்றில் மாபெரும் மறைவு.
முள்ளிவாய்க்கால் முடிவு அல்ல என்பதை நிறுவி பரிதி தன்சாவினால் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடர்ச்சியை பதிவு செய்து நிமிர்கின்றான் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் வரலாறு தொடர்கின்றது என்று அவனது சாவினால் ஓங்கி முரசொலிக்கின்றான்.
நாற்பதாயிரம் விடுதலைப்புலிகைள கடந்த அறுபத்திரெண்டு ஆண்டுகால விடுதலைப்போராட்ட வரலாற்றில் கொண்டு குவித்த சிங்கள அரசு எல்லாம் முடிந்து விட்டது என்று கனவு கண்ட சிங்கள அரசு கதிகலங்கி போகின்ற அளவிற்கு நாற்பதாயிரத்து ஓராவது வீரனாக பரிதி நிமிர்கிறானே அவன் நிமிர்கின்ற எழுச்சிக்கோலத்தை இன்று சிங்கள ஆட்சியாளர்கள் பாக்கின்றார்கள் அவர்கள் தங்ளுடைய கொடிய நெருப்பின் நாக்குகளை இரத்ப்பசியுடன் ஈழத்திற்கு வெளியிலும் பாயவிட்டிருக்கின்றார்கள்.
சிங்கள இனவெறியின் கைக்கூலிகள் தமிழீழத்திற்கு வெளியில் உள்ள பிரான்சில் பரிதினை சாகடித்திருக்கின்றார்கள்.

முன்னர் நாதன் கஜன் என்ற வீரர்களை பாரிசில் சுட்டார்கள் இன்றும் அதே மண்ணில் பரிதியினை கொன்றார்கள்.
பரிதி தமிழீழ விடுதலைப்பேராட்ட களத்தில் நெருப்பின் நடுவில் நின்ற போராளி அவன் சந்தித்த மிகப்பெரிய வரலாற்று களங்கள் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே போகலாம்
தலைவர் அவர்களின் பிள்ளையாக தலைவர் அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்டவன்
இந்த பரிதியின் இழப்பு ஈழத்தமிழ் மக்களை எல்லாம் எழுச்சிகொள்ள வைக்கும் என்று நான் நம்புகின்றேன்
எல்லாம் ஓய்ந்து விட்டது என்று எல்லாரும் ஒப்பரி வைக்கின்றார்கள் அவை அனைத்தினையும் பெய்யாக்கிவிட்டு மிகத்தேவையான காலத்தில் ஒரு நெருப்பினை மூட்டிவிட்டு பரிதி ஓய்ந்து போயுள்ளான்
களத்தில் நிக்கின்ற வீரர்கள் இன்றும் இருக்கின்றார்கள் போராளிகள் இருக்கின்றார்கள் மாவீரர்கள் இருக்கின்றார்கள் என்பதை மறுபடியும் பரிதி பதிவு செய்திருக்கின்றான்.

புலம்பெயர் மக்கள் பரிதியின் இழப்பினால் துடிதுடிப்பதாக நான் அறிகின்றேன் பரிதியின் சாவு ஒரு எழுச்சியின் சாவு உயிர் ஊட்டுகின்ற சாவு அப்படியான ஒரு சாவினைத்தான் வரலாற்றில் நிறுவிச்சென்றுள்ளான்
கடந்த காலத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் வீரர்கள் எவ்வாறு எங்களை வழிகாட்டினார்களோ அவ்வாறு பரிதியும் வளிகாட்டியுள்ளான்.
பரிதியின் வீரவரலாறு உறுதியாக நாளை இன்னும் வலிமையான வரலாறாக மாறும் தமிழீழம் அடைவது உறுதி என்று நாம் சொல்லுவோம் அந்த தமிழீழத்தை அடையும் வரை ஓயமாட்டோம் என்று முழக்கமிடுவோம்,பரிதி மேல் ஆணையேற்போம்,பரிதியின் உயிர்மேல் ஆணைஏற்போம்,பரிதி கடைசிவரை ஒருவிடுதலைப்புலியாக வாழ்ந்து உலகத்தில் படைத்திருக்கின்ற வீர வரலாற்றின் மேல் உறுதி ஏற்பேம் தமிழீழம் மலரும் அந்த காலத்தை விரைவில் உருவாக்கும் வோம் என்று உலகெங்கும் பரந்து வாழும் தமிழ்மக்கள் பரிதியின் மறைவோடு நாம் இணைவோம் நாம் எழுவோம் என்று உணர்ச்சி கவிஞர் காசியானந்தன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.