யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் இரத்தினசிங்கம் செந்தூரன் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் விக்டோரியா விளையாட்டுப் போட்டியில், உயரம் பாய்தலில் பங்குபற்றி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகர், அல்பேர்ட் பார்க்கில் நடைபெற்ற இந்த போட்டியில் 1.95 மீற்றர் உயரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தினைப் பெற்றுள்ளார்.
இவர் தேசிய கனிஸ்ட பிரிவு உயரம் பாய்தலில் 1.92 மீற்றர் உயரம் பாய்ந்து சாதனை நிகழ்த்தியிருந்தார்.
இதன் மூலம் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் விக்டோரியா மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பினைப் பெற்றிருந்தார்.
வடக்கைச் சேர்ந்த செந்தூரனுடன் இப்போட்டிக்கு இலங்கையிலிருந்து எட்டு வீரர்கள் அவுஸ்திரேலியா சென்றமை குறிப்பிடத்தக்கது.