வல்வை செய்திகள்

வல்வை உதயசூரியன் உல்லாசக்கடற்கரையினை கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்கும் நோக்கோடுஅணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா படங்கள் இணைப்பு

அடிக்கல் நாட்டு விழா

வல்வை உதயசூரியன் உல்லாசக்கடற்கரையினை கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்கும் நோக்கோடு ( எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி ) அணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை 29-05-2015 (இன்று) காலை 09.00 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.

வல்வை ஹீமுத்துமாரி அம்மன் வேவஸ்தான பிரதமகுரு மதிப்பிற்குரிய சிவஹீ சோமஸ்கந்த தண்டபாணிகதேசிகர்
அவர்களின் சமய அனுட்டானங்களுடன், உதயசூரியன் கழக மூத்த உறுப்பினர்கள் மற்றும் கழக நலன் விரும்பிகளால் அடிக்கல் நாட்டப்பட்டது.

மேலும் இவ் அணையை நிர்மானிப்பதற்கான மத்திய அரசாங்கத்தின் கிராமசேவகர்களுக்குரிய நிதி பங்கீட்டின் கீழ் பருத்தித்துறை பிரதேச செயலகம், வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடனும் வல்வை உதயசூரியன் கழக அங்கத்தவர்களுடைய நிதிப் பங்களிப்புடனும் இவ்வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *