வல்வெட்டித்துறையில் பிறந்து பிரபலமானவர்கள் – 01

திரு. ச. வைத்தியலிங்கம்பிள்ளை (1843 – 1901)
வல்வெட்டித்துறையில் பிறந்தவர். இவரது தந்தையார் பெயர் சங்கரப்பிள்ளை. உடுப்பிட்டி சிவசம்பு புலவரின் மாணாக்கர். இவர் பாரதி நிலைய முத்திராட்சகசாலை என்ற அச்சகத்தை நிறுவியதோடு, ஒரு தமிழ் பாடசாலையையும் நடத்தினார். 1878 இல் “நம்பியகப் பொருள்” என்ற இலக்கண நூலுக்கு விளக்கம் எழுதினார். “சைவ அபிமானி” என்ற பத்திரிகையை பாரதி நிலையத்தினூடாக மாதமொருமுறை இவர் வெளியிட்டார். சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள் எழுதிய “சைவமகத்துவம்” நூலுக்கு எழுந்த கண்டனங்களை மறுத்து “சைவமகத்துவ பானு” எழுதியவர். இயற்றமிழ்போதகாசிரியர் என்னும் பெயரால் அறியப்பட்டவர்.
■ இவரது சில நூல்கள்
1) சிவராத்திரி புராணம்
2) செல்வச் சந்நிதி முறை
3) சிந்தாமணி நிகண்டு (1876)
4) வல்வை வைத்தியேசர் பதிகம்
5) வல்வை வைத்தியேசர் ஊஞ்சல்
¨6) சாதி நிர்ணய புராணம்
7) சைவ மாகாத்மியம்
■ உரைகள்
1) கந்தபுராணத்து அண்டகோசப்படலவுரை
2) தெய்வயானை திருமணப்படலவுரை
3) வள்ளியம்மை திருமணப்படலவுரை
4) சூரபத்மன் வதைப்படலம்
5) சிவராத்திரி புராணம்

Leave a Reply

Your email address will not be published.