பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பரிதி என்னும் நடராஜா மதீந்திரன் அவர்களின் படுகொலையை அடுத்து தீவிர விசாரணைகளை மேற்கொண்ட காவற்துறையின் குற்றவியற் பிரிவினர் இப்படுகொலை தொடர்பாக 33 வயதுடைய சிறீலங்காப் பிரஜை ஒருவரைக் கைது செய்துள்ளதாகக் காவற்துறையினரின் தகவலை மேற்கோள் காட்டி Le Parisien செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இவர் மீதான விசராணை மூலம் மேலும் ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் தமது பிரத்தியேகத் தொடர்பின் தகவல் மூலம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அவர்கள் யார் என்பது போன்ற விடயங்கள் அப்பத்திரிக்கை வெளியிடவில்லை