வல்வை நலன்புரிச் சங்கத்தினரின் கோடைவிழா 2015க்கான வல்வை உணவகத்தின் கலந்துரையாடல்.
நடைபெற இருக்கும் வல்வை நலன்புரிச் சங்கத்தினரின் கோடைவிழா 2015க்கான வல்வை உணவகத்தின் ஆரம்பக்கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதால் உணவகத்தினரால் நடாத்தப்படும் கலந்துரையாடல் வரும் ஞாயிற்றுக்கிழமை (07.06.2015) அன்று மாலை 5.00மணி முதல் 7.00மணி வரை நடைபெறவுள்ளது.
எனவே வருடா, வருடம் வருகை தந்து எமது உணவகத்தை சிறப்பாக நடத்த உதவி புரிந்தவர்களுக்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் கடந்த வருடங்கள் போல் இவ் வருடமும் வல்வை நலன் விரும்பிகள் அனைவரும் நடைபெறவிருக்கும் வல்வை உணவகத்தின் கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
இடம் : No 109 Victoria Road,CR4 3JD
தொடர்வுகளுக்கு; வெள்ளைக் குட்டி : 07878184984, குமரன் 07946350668
வல்வை உணவகம் (ஐ.இ)