நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம் 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு தெரிவாகியுள்ளது
யங்கம்பன்ஸ் மைதானத்தில் ரசிகர்கள் வெள்ளம் திரண்டது…….
கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகம் மின்னொளியில் நடாத்தும் யாழ் மாவட்ட ரீதியான 7 நபர் கொண்ட மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் அரைஇறுதி ஆட்டம் [2015.06.05,வெள்ளி ] இரவு 09:00 மணியளவில் யங்கம்பன்ஸ் மைதானத்தில் பெருமளவு ரசிகர்கள் மத்தியில் மிக விறுவிறுப்பாக இடம்பெற்றது.
இவ் அரைஇறுதி போட்டியில் மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக்கழகம் மோதியது.
போட்டியின் ஆரம்பத்தில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதியது. பின்னர் போட்டியின் முற்பாதியின் 17வது நிமிடத்தில் சென்மேரிஸ் வீரர் யக்சன் தமது அணிக்காக முதலாவது கோலினை போட்டார். இடைவேளையின் முன்னர் சென்மேரிஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. போட்டியின் பிற்பாதியின் 20வது நிமிடத்தில் சென்மேரிஸ் வீரர் யூட் தமது அணிக்காக இரண்டாவது கோலினை போட்டார். இறுதியில் சென்மேரிஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று மாபெரும் இறுதிப் போட்டிக்கு முதலாவது அணியாக தகுதிபெற்றது. சென்மேரிஸ் சார்பாக யக்சன், யூட் தலா 1 கோல்களை போட்டனர்.
இவ் அரைஇறுதி போட்டியின் ஆட்டநாயகன் விருதினை சென்மேரிஸ் கோல்காப்பாளர் அலக்சன் தட்டிச்சென்றார்.
































































